ரஃபேல் ஊழல் புத்தகம் - பாய்ந்த ஊடகம்... பம்மிய தேர்தல் கமிஷன்! | Rafael Aircraft Book - Election Commission atrocities - Junior Vikatan | ஜூனியர் விகடன்

வெளியிடப்பட்ட நேரம்: 06:00 (06/04/2019)

ரஃபேல் ஊழல் புத்தகம் - பாய்ந்த ஊடகம்... பம்மிய தேர்தல் கமிஷன்!

‘தேர்தல் ஆணையம் தடை விதித்துள்ளது’ என்று சொல்லி, நாட்டை உலுக்கிக்கொண்டிருக்கும் ரஃபேல் பேர ஊழல் பற்றியப் புத்தகங்களைப் பறிமுதல் செய்த தேர்தல் அதிகாரியின் செயல் கண்டனத்துக்கு உள்ளாகி உள்ளது. பின்பு, ‘தடை விதிக்கப்படவில்லை’ என்று தேர்தல் ஆணையம் கூறியதை அடுத்துப் புத்தகங்கள் திரும்ப ஒப்படைக்கப்பட்டுள்ளன.

பாரதி புத்தகாலயம் சார்பில், எஸ்.விஜயன் எழுதிய `நாட்டை உலுக்கும் ரஃபேல் பேர ஊழல்’ என்ற புத்தக வெளியீட்டு விழா, ஏப்ரல் 2-ம் தேதி, சென்னை புரசைவாக்கத்தில் நடைபெறவிருந்தது. தகவல் அறிந்த ஆயிரம் விளக்குத் தொகுதி 1-வது தேர்தல் பறக்கும்படை அதிகாரியான மாநகராட்சியின் உதவிச் செயற்பொறியாளர் கணேஷ், ‘‘தேர்தல் நடத்தை விதிமீறல்கள் உள்ளதால், புத்தகத்தை வெளியிடத் தடை விதிக்கப்படுகிறது’’ என்று கூறிப் புத்தகங்களைப் பறிமுதல் செய்துள்ளார்.