மிஸ்டர் கழுகு: சென்னை ரெய்டு... கோவை பணம்... வேலூர் வீடியோ! | Mr.Kazhugu - Politics & Current affairs - Junior Vikatan | ஜூனியர் விகடன்

வெளியிடப்பட்ட நேரம்: 06:00 (06/04/2019)

மிஸ்டர் கழுகு: சென்னை ரெய்டு... கோவை பணம்... வேலூர் வீடியோ!

றுப்புக்கண்ணாடியுடன் வந்த கழுகார், ‘‘வெயில் கொளுத்துகிறது. பிரசாரம் இப்போதுதான் சூடு பிடித்துள்ளது’’ என்றபடி நேரடியாக விஷயத்துக்கு வந்தார். 

‘‘எடப்பாடி பழனிசாமி - ஸ்டாலின் பிரசாரங்கள் எப்படிப்போகின்றன?’’

“இருவரும் ஒருவரை ஒருவர் போட்டுத் தாக்குகிறார்கள். கொடநாடு, பொள்ளாச்சி விவகாரத்தைவைத்து எடப்பாடி பழனிசாமிக்கு எதிராக ஸ்டாலின் அஸ்திரம் வீசுகிறார். சாதிக்பாட்ஷா மனைவி மீதான தாக்குதல், பிரியாணிக் கடை சூறை போன்றவற்றைப் பேசி, பதிலடி தருகிறார் எடப்பாடி. சென்னையில் மர்மமான முறையில் இறந்துபோன தி.மு.க மகளிரணி பொறுப்பிலிருந்த கே.கே.நகர் பால்மலர் விவகாரம், சபரீசனுக்கும் போலி மருந்து வியாபாரிகளுக்கும் இருந்த தொடர்புகள் என்று சில விஷயங்களை எடுத்துவிட்டுத் தேர்தல் களத்தில் அனல் கிளப்பப் போகிறதாம் ஆளும்கட்சி.’’

‘‘மக்கள் ஆதரவு எப்படியிருக்கிறது?’’

‘‘பிரசாரத்துக்குப் பிறகு அ.தி.மு.க கூட்டணிக்கு ஆதரவு அதிகரித்திருப்பதாக உளவுத்துறை சொல்லியிருப்பது எடப்பாடி தரப்புக்கு உற்சாகத்தைக் கொடுத்துள்ளது. ‘மோடிக்கு எதிரான சிறுபான்மையினர் ஓட்டுகளை தினகரன் பிரித்துவிடுவார்’ என்றும் எடப்பாடி கணக்குபோடுகிறார். அதேபோல், ‘கடைசி கட்டத்தில் தி.மு.க தரப்பு பணம்கொடுப்பதைத் தடுக்க, வருமானவரித் துறை மற்றும் பறக்கும் படையை முழுமையாகப் பயன்படுத்தவேண்டும்’ என்பதில் ஆளும்தரப்பு உறுதியாக உள்ளது. தூத்துக்குடியில் அமித் ஷாவிடம் இதை சூசகமாக எடப்பாடி சொல்ல... அவரும் ஆமோதித்து விட்டாராம்!’’

நீங்க எப்படி பீல் பண்றீங்க