ஊழலை எதிர்த்துப் போராடிய சுஸானா! - ‘ஸ்லோ’வாக்கியாவின் ‘ஸ்பீட்’ பெண்மணி | Zuzana Caputova becomes Slovakia's first female president - Junior Vikatan | ஜூனியர் விகடன்

வெளியிடப்பட்ட நேரம்: 06:00 (06/04/2019)

ஊழலை எதிர்த்துப் போராடிய சுஸானா! - ‘ஸ்லோ’வாக்கியாவின் ‘ஸ்பீட்’ பெண்மணி

இந்திய நாடாளுமன்றத் தேர்தல் களம் சூடுபிடித்துள்ளது. மத்தியில் காங்கிரஸையும் பி.ஜே.பி-யையும் விட்டால் வேறு வழியில்லாத நிலைக்கு மக்கள் தள்ளப்பட்டுள்ளார்கள். தமிழகத்திலும் நிலைமை அப்படித்தான். ‘தி.மு.க-வை விட்டால் அ.தி.மு.க.’, ‘அ.தி.மு.க-வை விட்டால், தி.மு.க.’ அரசியலில் நம் மக்களுக்கு வேறு மாற்று இல்லை என்பதுதான் நம் தேசத்தின் பிரச்னை. எதற்காக இந்தப் பீடிகை என்கிறீர்களா? போலந்து மற்றும் உக்ரைன் நாடுகளின் அருகிலிருக்கும் ஐரோப்பிய யூனியன் நாடான ஸ்லோவாக்கியாவில் ஓர் ஆண்டுக்கு முன்பு அரசியலுக்கு அறிமுகமான பெண் ஒருவர், முப்பது ஆண்டுகாலமாக கோலோச்சிய அரசியல் கட்சியை மண்ணைக்கவ்வ வைத்து, முதல் பெண் அதிபராகவும் பதவி ஏற்றுள்ளார்! 

ஸ்லோவாக்கியாவில், அசுர பலத்தோடு ஆட்சி செய்த கட்சி ஸ்மெர். சுமார் 30 ஆண்டுகாலமாகக் கோலோச்சிய அரசியல் கட்சியை, தான் போட்டியிட்ட முதல் தேர்தலிலேயே தோற்கடித்து, அதிபராகியிருக்கிறார் சுஸானா காபுடோவா. முற்போக்கு சிந்தனைவாதியும் சுற்றுச்சூழல் போராளியுமான இவர், சமீபத்தில் நடைபெற்ற அதிபர் தேர்தலில், தேசிய ஸ்மெர் கட்சியின் வேட்பாளரைப் பெரும்பான்மையான வாக்கு வித்தியாசத்தில் (58 சதவிகிதம்) வென்றுள்ளார்.

அடிப்படையில் சுஸானா ஓர் அரசியல்வாதி இல்லை. எந்தக் கட்சியிலும் அவர் உறுப்பினராகக் கூட இருந்ததில்லை. வக்கீலாகத் தன் பணியைச் சொந்த ஊரான ப்ராட்டிஸ்லாவா நகரில் செய்துவந்தார். கடந்த 1999-ல் ஒரு பன்னாட்டுத் தனியார் நிறுவனம் ப்ராட்டிஸ்லாவா நகரை நச்சுக் கழிவைக்கொட்டும் குப்பைத்தொட்டியாக மாற்றியபோது, வெகுண்டெழுந்து போராடினார். 14 ஆண்டுகள் அவர்களுக்கு எதிராகச் சட்டப்போராட்டம் நடத்தி, வெற்றியும் பெற்றார். இவரது சட்டப் போராட்டம், அந்நிறுவனத்தின் அரசியல் செல்வாக்கு மிக்க தொழிலதிபரான கொஸ்னெரை சிறையில் அடைத்தது.

நீங்க எப்படி பீல் பண்றீங்க