மாற்றத்தை மய்யம் தரும்! - கமீலா நாசர் நம்பிக்கை... | Makkal Needhi Maiam Kameela Nasser interview - Junior Vikatan | ஜூனியர் விகடன்

வெளியிடப்பட்ட நேரம்: 06:00 (06/04/2019)

மாற்றத்தை மய்யம் தரும்! - கமீலா நாசர் நம்பிக்கை...

ட்சி தொடங்கி ஒரு வருடம் ஆன நிலையில், நாடாளுமன்றத் தேர்தல், சட்டமன்ற இடைத்தேர்தல் என்ற இரண்டு பெரும் தேர்தல் களங்களைக் கூட்டணியின்றி தனித்துச் சந்திக்கிறது மக்கள் நீதி மய்யம்! தலைவர் கமல்ஹாசன் தேர்தலில் போட்டியிடாதது, பட்டதாரி வேட்பாளர்கள், வித்தியாசமான பிரசார மேடைகள், உரைக்கு இடையே காணொளி - குறும்படம் வழியாகப் பரப்புரை என்று ஏகத்துக்கும் புதுமைகாட்டுகிறது மக்கள் நீதி மய்யம். மத்திய சென்னையின் ம.நீ.ம வேட்பாளரும் நடிகர் நாசரின் மனைவியுமான கமீலா நாசரிடம் சில கேள்விகளை முன்வைத்தோம்.

“உங்களைப் பற்றி..?”

‘‘நான் எம்.எஸ்.சி, எம்.பில் படித்திருக்கிறேன். குறிப்பாகக் குழந்தைகள் நலத்தைப் பேணும், அவர்கள் அறிவாற்றல் வளர்ச்சி பற்றிய Cognitive Developement பற்றிப் படித்திருக்கிறேன். நான் ஒரு திரைப்படத் தயாரிப்பாளரும்கூட. தயாரிப்பாளர் சங்கத்தில் பல ஆண்டுகளாகச் செயல்பட்டுக்கொண்டிருக்கிறேன். பாலாஜி டெலிஃபிலிம்ஸ் நிறுவனத் தில் ரீஜினல் ஹெட் ஆக பணியாற்றி இருக்கிறேன். மன வளர்ச்சி குன்றியக் குழந்தைகளின் நலனுக்காகப் பல முயற்சிகளை எடுத்து வருகிறேன்.’’