மோடி, எ மிஸ்டேக்! - கோபப்படுகிறார் கோபண்ணா... | TN Congress senior Gopanna wrote a book about Modi - Junior Vikatan | ஜூனியர் விகடன்

வெளியிடப்பட்ட நேரம்: 06:00 (06/04/2019)

மோடி, எ மிஸ்டேக்! - கோபப்படுகிறார் கோபண்ணா...

ந்தாண்டு கால பிரதமர் மோடி ஆட்சியின் பல்வேறு தவறுகளையும், மக்கள்விரோத முடிவுகளையும், புள்ளிவிவரங்களோடு எழுதி, ‘மோடி எ மிஸ்டேக்’ என்கிற தலைப்பில் ஆங்கிலப் புத்தகமாக வெளியிட்டிருக்கிறார், தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டியின் மூத்த தலைவர்களில் ஒருவரான கோபண்ணா. மோடியின் அரசியல் மற்றும் அரசு நிர்வாக நடவடிக்கைகளைக் கடுமையாக விமர்சிக்கிறது இந்தப் புத்தகம். இந்த நூல் தமிழிலும் மொழிபெயர்க்கப்பட்டிருக்கிறது. அதில், அ.தி.மு.க அரசுக்கு எதிராக கோபண்ணா எழுதிய இருபது பக்கத் தகவல்களையும் சேர்த்து, “மோசடி, பினாமி ஆட்சிகளை அகற்றுவோம்” என்று கையேடாக வெளியிட்டுள்ளனர். மோடியின்மீதான கோபத்தை, மொத்தமாகப் புத்தகத்தில் கொட்டித் தீர்த்துள்ள கோபண்ணாவிடம் பேசினோம்...