அமைதி... அமைதி... அமைதியோ அமைதி! - இது அழகிரியின் வியூகம்... | M K Azhagiri silent strategy - Junior Vikatan | ஜூனியர் விகடன்

வெளியிடப்பட்ட நேரம்: 06:00 (06/04/2019)

அமைதி... அமைதி... அமைதியோ அமைதி! - இது அழகிரியின் வியூகம்...

“இன்னும் சிலநாள்களில், அடுத்தகட்ட நடவடிக்கைப் பற்றிச் சொல்கிறேன்” என்று தி.மு.க தலைவர் கருணாநிதி மறைவுக்குப் பின்னர் அறிவித்தார் மு.க.அழகிரி. அதன் பின்பு சென்னையில் ஒரு பேரணி நடத்தினார். பெரியதாக எடுபடவில்லை. அழகிரியின் பிறந்தநாளான கடந்த ஜனவரி 30-க்குப் பிறகு, பிப்ரவரி புரட்சி வெடிக்கும் என்றெல்லாம் பில்ட் அப் கொடுத்தார்கள். ம்ஹும்... வண்டி கிளம்பவே இல்லை. இப்போது, நாடாளுமன்றத் தேர்தலுக்கு நாள்கள் எண்ணப்படும் நிலையிலும் அமைதி காக்கிறார் அழகிரி. இதனால், அவரது ஆதரவாளர்கள் குழப்பத்தில் தவிக்கிறார்கள்!

2014-ம் ஆண்டு நாடாளுமன்றத் தேர்தலுக்கு முன்னதாக தே.மு.தி.க பற்றி அழகிரி விமர்சனம் செய்ததால், கட்சியிலிருந்து நீக்கப்பட்டார். அதன் பின்னர் தி.மு.க தலைவர் கருணாநிதியிடம் பலமுறை வேண்டுகோள் விடுத்தும் கட்சியில் சேர்த்துக் கொள்ளப்படவில்லை. 2016-ம் ஆண்டு சட்டசபைத் தேர்தலின்போதும், அழகிரி தனது நிலைப்பாட்டைத் தெரிவிக்கவில்லை. கருணாநிதி இறந்தபின்னரும், மு.க.ஸ்டாலின் அழகிரியை உள்ளே விடவில்லை. இதற்கிடையே, ‘சிவகங்கையில் போட்டியிடும் ஹெச்.ராஜாவுக்கு அழகிரி ஆதரவு தெரிவித்தார்’ என்றத் தகவலைக் கடந்தவாரம் பி.ஜே.பி-யினர் படத்துடன் பரப்பினர். இதுகுறித்துக் கேட்டதற்கு, ‘‘அது பழைய படம், நான் யாருக்கும் ஆதரவு தெரிவிக்கவில்லை. என் நிலைப்பாட்டை விரைவில் அறிவிப்பேன்’’ என்று நம்மிடம் தெரிவித்தார் அழகிரி.

நீங்க எப்படி பீல் பண்றீங்க