வசந்தகுமார் ஆஸ்திரேலிய பறவை... பொரிந்துதள்ளும் பொன்.ராதாகிருஷ்ணன்! | BJP Kanyakumari candidate Pon Radhakrishnan interview - Junior Vikatan | ஜூனியர் விகடன்

வெளியிடப்பட்ட நேரம்: 06:00 (06/04/2019)

வசந்தகுமார் ஆஸ்திரேலிய பறவை... பொரிந்துதள்ளும் பொன்.ராதாகிருஷ்ணன்!

முக்கடலும் முத்தமிடும் கன்னியாகுமரி தொகுதியில், மீண்டும் வெற்றிபெறும் ஆவலில் ஓட்டுவேட்டை நடத்தி வருகிறார் மத்திய அமைச்சர் பொன்.ராதாகிருஷ்ணன். திறந்த ஜீப்பில் வாக்குச் சேகரித்துக்கொண்டே வந்தவர், மதிய வேளையில் தொண்டர் ஒருவரின் வீட்டில் உணவருந்த அமர்ந்தார். அவரிடம் சில கேள்விகளை முன்வைத்தோம்.

‘‘கன்னியாகுமரி மாவட்டத்தில், ‘மதம் சார்ந்த 37 ஆண்டுக்கால பகையைத் தீர்த்துவைப்பேன்’ என்று பிரசாரத்தில் கூறுகிறீர்கள். அதற்கு என்ன திட்டம் வைத்திருக்கிறீர்கள்?’’

‘‘37 வருடங்களுக்கு முன்பு மதம் சம்பந்தமான பிரச்னைகள் நடந்தன (மண்டைக்காடு கலவரம்). அந்தப் பிரச்னைகளை அடிப்படையாகவைத்து ஆதாயம் தேடும் முயற்சியில் காங்கிரஸ் கட்சி செயல்படுகிறது.  இந்தச் சூழ்ச்சிதான் இந்த மண்ணை வேறுபடுத்திவைத்திருக்கிறது. அதிலிருந்து மாற்றம் கொண்டுவரக்கூடிய எல்லா முயற்சிகளையும் மேற்கொள்வேன்.’’