“இந்தத் தேர்தலுக்குப் பிறகு அ.தி.மு.க அரசு நீடிக்காது!’’ - உதயநிதி உற்சாகம்... | Udhayanidhi Stalin interview - Junior Vikatan | ஜூனியர் விகடன்

வெளியிடப்பட்ட நேரம்: 06:00 (06/04/2019)

“இந்தத் தேர்தலுக்குப் பிறகு அ.தி.மு.க அரசு நீடிக்காது!’’ - உதயநிதி உற்சாகம்...

சினிமா நட்சத்திரங்களின் பிரசாரம் இந்தத் தேர்தலில் பெரிதாக இல்லாத நிலையில், தி.மு.க-வின் ஸ்டார் பேச்சாளராகவும் ஸ்டாலினின் வாரிசு என்கிற அடையாளத்துடனும் தீவிரப் பிரசாரத்தில் ஈடுபட்டுவருகிறார் உதயநிதி ஸ்டாலின். தேர்தல் நிலவரம் குறித்தும், தி.மு.க கூட்டணியின் வெற்றிவாய்ப்பு குறித்தும் அவரிடம் சில கேள்விகளை முன்வைத்தோம்.

‘‘தி.மு.க கூட்டணியின் வெற்றிவாய்ப்பு இந்தத் தேர்தலில் எப்படி இருக்கிறது?’’

‘‘பிரகாசமாக இருக்கிறது. தமிழக மக்கள் எடப்பாடி பழனிசாமிமீதும், மோடிமீதும் கொந்தளிப்பில் இருக்கிறார்கள். ஜி.எஸ்.டி, பணமதிப்பிழப்பு போன்ற விஷயங்களை மக்கள் மறக்கவில்லை. ஒவ்வொரு தொகுதியிலும் தி.மு.க வேட்பாளருக்கு, மக்களிடம் கிடைக்கும் ஆதரவைப் பார்த்தால் இந்தத் தேர்தலில், 2004-ம் ஆண்டு தேர்தலைப்போலவே அனைத்துத் தொகுதிகளையும் தி.மு.க கூட்டணி வென்றுவிடும் என்ற நம்பிக்கை ஏற்படுகிறது.’’

‘‘கருணாநிதி இருந்தவரைத் தேர்தல் பிரசாரத்தில் ஈடுபடாத நீங்கள், இப்போது பிரசாரத்தில் இறங்கக் காரணம் என்ன?’’

‘‘தாத்தா இருந்தபோதே துறைமுகம், ஆயிரம்விளக்கு போன்ற தொகுதிகளில் பிரசாரம் செய்துள்ளேன். ஆனால், இந்த முறைதான் முழு அளவில் பிரசாரத்தில் இறங்கியுள்ளேன். அப்பா தலைவரானபிறகு அவரால் அனைத்து இடங்களுக்கும் செல்லமுடியாத நிலை இருக்கிறது. அவருக்கு உதவியாக கிராம சபைக் கூட்டங்களுக்குச் சென்றேன். அதன் தொடர்ச்சி யாகப் பிரசாரத்துக்கும் செல்கிறேன்.’’