அ.தி.மு.க-வில் அமைச்சர்கள் அனைவருமே கோமாளிகள்! | TN Congress senior EVKS Ilangovan interview - Junior Vikatan | ஜூனியர் விகடன்

வெளியிடப்பட்ட நேரம்: 06:00 (06/04/2019)

அ.தி.மு.க-வில் அமைச்சர்கள் அனைவருமே கோமாளிகள்!

ஈ.வி.கே.எஸ் இளங்கோவன் அதிரடி

கேள்வியை முடிப்பதற்குள்ளாகவே, பதில்களைத் தெறிக்கவிடுவது ஈ.வி.கே.எஸ். இளங்கோவன் ஸ்டைல். தேனி தொகுதியில், பிரசாரத்தில் ஈடுபட்டிருந்தவரைச் சந்தித்துப் பேசினோம்...

‘‘தேனி தொகுதி நீங்கள் விரும்பிக் கேட்டதா... தலைமை முடிவுசெய்ததா?’’

‘‘நான் ஈரோட்டில் நிற்பதாகச் சொன்னேன். வைகோ-வுக்கு அந்தத் தொகுதி ஒதுக்கப்பட்டது. ஆரூணுக்கு உடல்நிலை சரியில்லை. அதனால் தேனியில் நிற்கிறீர்களா என்று கேட்டார்கள். சந்தோசமாகக் கிளம்பி வந்துவிட்டேன்.’’