“பெண் பழி சுமத்தி வழக்கை முடிக்கப் பார்க்கிறார்கள்!” | Activist Mugilan wife talks about missing issue - Junior Vikatan | ஜூனியர் விகடன்

வெளியிடப்பட்ட நேரம்: 06:00 (06/04/2019)

“பெண் பழி சுமத்தி வழக்கை முடிக்கப் பார்க்கிறார்கள்!”

கொந்தளிக்கும் முகிலன் மனைவி பூங்கொடி!

‘பெண்கள் விவகாரத்தால் தலைமறைவானாரா முகிலன்? சுழன்றடிக்கும் சர்ச்சைகள்… விடை தெரியாத கேள்விகள்…’ என்ற தலைப்பில், 31.3.2019 தேதியிட்ட ஜூனியர் விகடன் இதழில் ஒரு கட்டுரை வெளியிட்டிருந்தோம். அதன் தொடர்ச்சியாக, 31.03.2019 அன்று காலை குளித்தலை அனைத்து மகளிர் காவல் நிலையத்தில், ‘என்னைத் திருமணம் செய்துகொள்வதாக ஆசை வார்த்தைக் கூறி, நம்பவைத்துக் கட்டாயப்படுத்தி உடலுறவுகொண்டு என் வாழ்க்கையை முகிலன் கெடுத்துவிட்டார்’ என ஒரு பெண் பரபரப்பான புகாரை அளித்திருக்கிறார்.

இந்தச் சர்ச்சைகள் குறித்து ஏற்கெனவே முகிலனின் மனைவி பூங்கொடியிடம் பேசியபோது பேச மறுத்துவிட்டார். இப்போது ஒரு பெண் புகார் கொடுத்ததும் அவரே நம்மிடம் பேசினார். “முகிலனை இன்னும் காவல் துறையால் கண்டுபிடிக்க முடியவில்லை. வழக்கு சம்பந்தமாக ஏப்ரல் 8-ம் தேதி சென்னை உயர் நீதிமன்றத்தில் சி.பி.சி.ஐ.டி போலீஸார் பதில் சொல்லியாக வேண்டும். எனவே, வழக்கைத் திசைதிருப்புவதற்காக, ‘பெண் ஒருவர் முகிலன்மீது புகார் கொடுத்திருக்கிறார். அதனால், விசாரிக்க இன்னும் இரண்டு, மூன்று வாரங்கள் கால அவகாசம் தேவைப்படுகிறது’ என்று நீதிமன்றத்தில் நேரம் கேட்பதற்காக இப்படி கிளப்பியிருக்கிறார்கள். முகிலன் காணாமல்போன அன்றைக்கே, சம்பந்தப்பட்ட பெண் இந்தப் புகாரைச் சொல்லியிருக்கலாம். 43 நாள்கள் கழித்துப் புகார் கொடுக்கிறார் என்றால், அவரை யாரோ பின்னணியில் இருந்து இயக்குகிறார்கள் என்று தெரிகிறது. எது நடந்தாலும் எல்லாவற்றையும் சந்திக்க நான் தயாராக இருக்கிறேன்.