மிஸ்டர் கழுகு: தி.மு.க 30 - அ.தி.மு.க 7 - இழுபறி 3 | Mr.Kazhugu - Politics & Current affairs - Junior Vikatan | ஜூனியர் விகடன்

வெளியிடப்பட்ட நேரம்: 06:00 (09/04/2019)

மிஸ்டர் கழுகு: தி.மு.க 30 - அ.தி.மு.க 7 - இழுபறி 3

மிழகம் முழுவதுமிருந்து வந்திருந்த சர்வே ரிசல்ட் பேப்பர்களை வைத்துக் கொண்டு பரபரப்பாக வேலை செய்துகொண்டிருந்தது, ஜூ.வி. டீம். சத்தம் இல்லாமல் அலுவலகத்துக்குள் ‘என்ட்ரி’ கொடுத்த கழுகார்... ‘‘எப்போதும் என்னிடம்தானே கேள்வி கேட்கிறீர்கள். இப்போது நான் உங்களிடம் கேள்வி கேட்கப் போகிறேன்” என்று பீடிகை போட்டபடி அமர்ந்தார்.

“கேளுங்கள்” என்றோம்.

“உமது கருத்துக்கணிப்பு ரிசல்ட் என்ன?”

“சட்டமன்ற இடைத்தேர்தல் சர்வே பணிக்காக நமது நிருபர்கள், மாணவப் பத்திரிகையாளர்கள், புகைப்பட நிபுணர்கள் என 90 பேர் கொண்ட  படையைக் களத்தில் இறக்கினோம். அவர்கள், இடைத்தேர்தல் நடக்கவிருக்கிற 18 சட்டமன்றத் தொகுதிகளில் சுமார் பத்தாயிரம் நபர்களைச் சந்தித்து சர்வே எடுத்துள்ளனர். நாற்பது நாடாளுமன்றத் தொகுதிகளில், ஒவ்வொரு தொகுதியிலும் அந்த மாவட்ட நிருபர் உட்பட மூன்று நபர்கள் கள நிலவரத்தை ஆராய்ந்தனர். ஐந்து தொகுதிகளுக்கு ஒரு மேற்பார்வையாளர் என நியமிக்கப்பட்டு, அவர்கள் களப்பணியிலிருந்தவர்களிடம் பேசி அப்டேட் செய்துவந்தனர். இழுபறியாக இருந்த சில தொகுதிகளுக்கு மேற்பார்வையாளர்கள் நேரிலும் சென்று களநிலவரத்தை அலசி ஆராய்ந்தனர். இரண்டு வாரங்களாக ஒட்டுமொத்தக் குழுவும் இந்தப் பணிகளுக்காகக் கடுமையாக உழைத்துள்ளது.”

“அருமை... அருமை...”

“பொதுவாக  பெருவாரியான தமிழக மக்களின் மனநிலை இப்போது தி.மு.க-வுக்குச் சாதகமாகவே இருக்கிறது. அ.தி.மு.க வாக்கு வங்கியில், சரிவு ஏற்பட்டுள்ளது நமது சர்வே முடிவுகளின் மூலம் தெளிவாகத் தெரிகிறது. இடைத்தேர்தல் நடக்கும் 18 சட்டமன்றத் தொகுதிகளில்  17 தொகுதிகளில் தி.மு.க-தான் முன்னிலையில் இருக்கிறது. அந்தத் தொகுதிகளில் எடுக்கப்பட்ட சர்வே குறித்துத் தனிக்கட்டுரையாகத் தந்துள்ளோம். அதைப் படித்துக்கொள்ளும்.”
“நல்லது. நாடாளுமன்றத் தேர்தல் நிலவரங்களைச் சொல்லும்”

நீங்க எப்படி பீல் பண்றீங்க