நான் சர்வாதிகாரிதான்! - சீறுகிறார் சீமான் | Naam Tamilar Katchi Seeman interview - Junior Vikatan | ஜூனியர் விகடன்

வெளியிடப்பட்ட நேரம்: 06:00 (13/04/2019)

நான் சர்வாதிகாரிதான்! - சீறுகிறார் சீமான்

சும்மாவே சீறுவார் சீமான்... இது தேர்தல் நேரம்... மேடையேறி மைக் பிடித்தால், ஆளும்கட்சி, எதிர்க்கட்சி என்ற எந்தப் பாகுபாடும் இல்லாமல் ஒட்டுமொத்த அரசியலையும் நார் நாராகக் கிழித்துத் தொங்கவிடுகிறார். பரபர பரப்புரையில் இருந்த ‘நாம் தமிழர் கட்சி’ ஒருங்கிணைப்பாளர் சீமானைச் சந்தித்துப் பேசினோம்!

‘‘2014 நாடாளுமன்றத்தேர்தலில் போட்டியிடாத, நா.த.க 2019 தேர்தலில் போட்டியிடக் காரணம் என்ன?’’

‘‘2014-ம் ஆண்டு தேர்தலில், காங்கிரஸ் மற்றும் பி.ஜே.பி-க்கு எதிராகப் பிரசாரம்செய்தோம். அப்போது ஜெயலலிதா அழைத்து, எல்லாத் தொகுதிகளிலும் பிரசாரம் செய்யச்சொன்னார். ‘அது நம் கொள்கைக்குச் சரி வராது’ என்று முடிவெடுத்தோம். அதன்பிறகு 2016-ல்தான் நேரடித் தேர்தலுக்கு வந்தோம். தற்போது எங்கள் பலத்தை அதிகரித்து, இந்தத் தேர்தலைச் சந்திக்கிறோம்’’.

‘‘இடைத்தேர்தல் மற்றும் நாடாளுமன்றத் தேர்தலில் சீமான் போட்டியிடாதது ஏன்?’’

‘‘ஒரு மாநிலக் கட்சி, தேசிய நலனுக்குப் பாடுபடும் ஒரு தலைவன்... இந்த நிலத்தில்தான் அரசியல் செய்ய வேண்டும். புதிய சின்னம் கொடுக்கப்பட்டிருக்கிறது. தமிழகம் முழுக்கப் பரப்புரை செய்து சின்னத்தை மக்களிடம் கொண்டு செல்வதுதான் இப்போதைய எனது முதன்மைப் பணி. வரவிருக்கும் சட்டமன்றத் தேர்தலில்தான், நான் போட்டியிடுவது குறித்துச் சிந்திக்க முடியும்.’’