தினகரன் தனிமரமாகி விடுவார்! - ஜெயக்குமார் ஆருடம் | ADMK Minister Jayakumar interview - Junior Vikatan | ஜூனியர் விகடன்

வெளியிடப்பட்ட நேரம்: 06:00 (13/04/2019)

தினகரன் தனிமரமாகி விடுவார்! - ஜெயக்குமார் ஆருடம்

முதல்வர் எடப்பாடி பழனிசாமி உட்பட அ.தி.மு.க-வின் அத்தனைப் பெருந் தலைகளும் தமிழகம் முழுக்கப் பிரசாரத்தில் பிஸியாக இருக்க.... தலைநகரில் அ.தி.மு.க அணிக்கு பிஸியாகப் பிரசாரம் செய்துவருகிறார் அமைச்சர் ஜெயக்குமார். அவரிடம் பேசியதிலிருந்து...  

“அ.தி.மு.க-வின் வாக்குகளை டி.டி.வி.தினகரனின் அ.ம.மு.க பெரியளவில் பிரிக்கும் என்றும், அது தி.மு.க கூட்டணியின் வெற்றிக்குப் பலம் சேர்க்கும் என்றும் அரசியல் விமர்சகர்கள் கணிக்கிறார்களே?”

“கட்சியிலிருந்து ஒரு சிலர் வெளியேறி யிருக்கிறார்கள். அதைவைத்து இந்த இயக்கம் பலவீனமாகிவிட்டதாக நினைக்கக்கூடாது. இப்போதும் அதே பலத்துடன்தான் அ.தி.மு.க இருக்கிறது. அனைத்துத் தொகுதிகளிலும் நாங்கள் வெற்றிபெறுவோம்.”

“டி.டி.வி.தினகரன் செல்லும் இடங்களில் எல்லாம் அதிகமாகக் கூட்டம் கூடுகிறது. அவர் கணிசமான வாக்குகளைப்பெறுவார் என்கிறார்களே?”

“வெறும் கூட்டத்தைவைத்து, அவர் பலசாலி என்று சொல்லமுடியாது. அவருக்குக் கூடுவது எல்லாம் பணம் கொடுத்துக் கூட்டிவரப்படும் கூட்டம். இரட்டை இலைக்கு ஓட்டுப்போட்ட கை, வேறு சின்னத்துக்கு ஓட்டுப்போடாது. எனவே, அ.தி.மு.க வாக்குகள் நிச்சயம் பிரியாது. தேர்தல் முடிவுகள் வரும்போது, தினகரன் தனிமரமாகிவிடுவார்.”

நீங்க எப்படி பீல் பண்றீங்க