யார் சந்தனம்... யார் சாக்கடை? - எகிறுகிறார் ஏ.சி.சண்முகம் | Pudhiya Neethi Katchi AC Shanmugam interview - Junior Vikatan | ஜூனியர் விகடன்

வெளியிடப்பட்ட நேரம்: 06:00 (13/04/2019)

யார் சந்தனம்... யார் சாக்கடை? - எகிறுகிறார் ஏ.சி.சண்முகம்

துரைமுருகன் மகன் கதிர்ஆனந்தை வருமானவரித் துறை அதிகாரிகள் கண்காணிப்பு வளையத்துக்குள் வைத்திருப்பதாக அறிவாலயம் கொந்தளிக்கிறது. ‘‘கதிர்ஆனந்தின் வெற்றியைத் தடுக்க மத்திய, மாநில அரசுகளுடன் கூட்டணி சேர்ந்திருக்கும் கழிசடை அரசியல்வாதிதான் வருமானவரித் துறையை ஏவிவிட்டுள்ளார்’’ என்று தரைமட்டத்துக்குக் கீழிறங்கி விமர்சித்திருக்கிறார் துரைமுருகன். இதுபற்றி ஏ.சி.சண்முகத்திடம் கேட்டோம்.

‘‘துரைமுருகன் உங்களைத்தான் குறிப்பிட்டு விமர்சனம் செய்திருப்பதாக அரசியல் வட்டாரத்தில் கூறப்படுகிறதே?”

‘‘அண்ணாவின் தம்பி என்று சொல்லிக்கொள்ளும் துரைமுருகன், தன் மகனுக்காகப் பொறுமையை இழந்திருக்கிறார். ‘கழிசடை அரசியல்வாதி’ என்றும் புறம்போக்குத்தனமாக வெற்றியைத் தடுக்கப் பார்ப்பதாகவும் என்னைத் தரக்குறைவாகப் பேசுகிறார். யார் சாக்கடை, யார் சந்தனம்... என்று மக்கள் முடிவுசெய்வார்கள்.’’