ஆமாம்... நான் சசிகலா உறவினர்தான்! - பழனிமாணிக்கம் ‘பளிச்’ | Thanjavur DMK candidate Palanimanickam interview - Junior Vikatan | ஜூனியர் விகடன்

வெளியிடப்பட்ட நேரம்: 06:00 (13/04/2019)

ஆமாம்... நான் சசிகலா உறவினர்தான்! - பழனிமாணிக்கம் ‘பளிச்’

ஞ்சாவூர்  நாடாளுமன்றத் தொகுதி தி.மு.க வேட்பாளர் எஸ்.எஸ்.பழனி மாணிக்கம், தடாலடி பேட்டிகளுக்குச் சொந்தக் காரர். தேர்தல் பிரசாரத்துக்குக் கிளம்பிக் கொண்டிருந்தவரை, தஞ்சாவூர் கலைஞர் அறிவாலயத்தில், பேட்டிக்காகச் சந்தித்தோம். கருணாநிதியின் படத்தை வணங்கிவிட்டுப் பேசத் தொடங்கினார்.

“ஸ்டாலினோடு மோதல் என்று செய்தி வந்ததே?”

‘‘சின்னச் சின்னக் கருத்து வேறுபாடு ஏற்பட்டாலும், தலைவர் ஸ்டாலின்மீது நான் வைத்திருக்கும் விசுவாசம் என்றுமே குறைந்தது இல்லை.’’

‘‘தி.மு.க-வின் மூத்தத் தலைவரான நீங்கள், எம்.பி தேர்தலில் தொடர்ந்து ஐந்து முறை வெற்றி பெற்றவரும்கூட. ஆனால், கடந்தமுறை போட்டியிட வாய்ப்பு வழங்கப்படவில்லையே ஏன்?’’

‘‘எல்லாக் கட்சியிலுமே ஜனநாயகரீதியான போட்டி இருக்கத்தான் செய்யும். அந்தநேரத்தில், டி.ஆர் பாலுவை என்னைவிடத் தகுதியானவர் என்று நினைத்து  தலைமை அவருக்கு சீட் கொடுத்திருக்கலாம். அதை ஏற்றுக்கொண்டதால் தான் இந்த முறை எனக்கு வாய்ப்பு கிடைத்திருக்கிறது.’’

நீங்க எப்படி பீல் பண்றீங்க