ஹெலிகாப்டரில் வருபவர்களை மக்கள் விரும்புவதில்லை! - வயநாடு சுனீர் சுளீர் | Wayanad CPI candidate PP Suneer interview - Junior Vikatan | ஜூனியர் விகடன்

வெளியிடப்பட்ட நேரம்: 06:00 (13/04/2019)

ஹெலிகாப்டரில் வருபவர்களை மக்கள் விரும்புவதில்லை! - வயநாடு சுனீர் சுளீர்

ராகுல் காந்தியின் வயநாடு என்ட்ரி, கேரள அரசியலில் பல்வேறு திருப்பங்களை ஏற்படுத்தியுள்ளது. ராகுல் காந்தி வருகைக்கு முன்புவரை ‘வயநாட்டில், எப்படியாவது வெற்றி பெற்றுவிடலாம்’ என்ற நம்பிக்கையுடன் இருந்த கம்யூனிஸ்ட் தோழர்கள், தற்போது கலக்கத்தில் உள்ளனர். ஆனாலும், பி.ஜே.பி-யைப்போல வேட்பாளரை மாற்றாமல், பிரசார வியூகத்தை மட்டும் மாற்றியிருக்கிறார்கள். வயநாட்டில் இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் சார்பில், பி.பி.சுனீர் போட்டியிடுகிறார். பரபரப்பானப் பிரசாரத்துக்கு நடுவே, மதிய உணவு இடைவெளியில் நமக்கு நேரம் ஒதுக்கினார். அவரிடம் சில கேள்விகளை முன்வைத்தோம்.

“மக்களிடம் உங்களுக்கு வரவேற்பு எப்படி இருக்கிறது?”

“சிறப்பாக இருக்கிறது. நான் இந்த மண்ணின் மைந்தன். எனக்கு இந்த மக்களின் பிரச்னைகள் நன்கு தெரியும். அவர்களும் என்னை நன்கு அறிவார்கள். ஹெலிகாப்டரில் வந்து செல்பவர்களைவிட, மக்களோடு மக்களாக நிற்கும் என்னைப் போன்ற வேட்பாளர்களைத்தான் கேரள மக்கள் விரும்புவார்கள்.”