நாட்டின் பிரதமரை வயநாடு முடிவுசெய்யும்! - தன்னம்பிக்கை தங்கபாலு | TN Congress senior Thangabalu interview - Junior Vikatan | ஜூனியர் விகடன்

வெளியிடப்பட்ட நேரம்: 06:00 (13/04/2019)

நாட்டின் பிரதமரை வயநாடு முடிவுசெய்யும்! - தன்னம்பிக்கை தங்கபாலு

ராகுல் காந்தி வயநாட்டில் போட்டியிடுவதால், கேரள காங்கிரஸ் கட்சியினர் உற்சாகமாக களமாடிவருகிறார்கள். மூன்று மாநிலங்களின் எல்லை என்பதால், கேரளம் மட்டுமல்லாமல் தமிழகம், கர்நாடக காங்கிரஸ் பிரமுகர்களும் வயநாட்டில் முகாமிட்டுள்ளனர். முன்னாள் அமைச்சர் தங்கபாலுவை, வயநாடு தேர்தல் பொறுப்பாளராக நியமித்திருக்கிறது தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி. தேர்தல் களத்தில் பிஸியாகச் சுற்றிக்கொண்டிருந்தவரைச் சந்தித்தோம்.

“வயநாடு தேர்தல் களம் எப்படி இருக்கிறது?”

“ராகுல் காந்தி வேட்பு மனுத்தாக்கல் செய்ததிலிருந்து, அவருக்கு அமோக வரவேற்பு இருக்கிறது. வேட்பு மனுத்தாக்கல் செய்தபோதே லட்சக்கணக்கான மக்கள் திரண்டுவந்து வரவேற்றார்கள். இதுவே, எங்களின் வெற்றியைப் பிரகாசப்படுத்தி யுள்ளது.”