தபால் ஓட்டுரிமையைத் தடுக்கிறதா தமிழக அரசு? - அதிருப்தியில் அரசு ஊழியர்கள்! | TN Govt avoid Postal voting - Junior Vikatan | ஜூனியர் விகடன்

வெளியிடப்பட்ட நேரம்: 06:00 (13/04/2019)

தபால் ஓட்டுரிமையைத் தடுக்கிறதா தமிழக அரசு? - அதிருப்தியில் அரசு ஊழியர்கள்!

‘அரசுக்கு எதிராக ஓட்டுப்போடுவார்கள்’ என்று சர்ச்சை எழுந்துள்ளதையடுத்து, அரசு ஊழியர்களுக்கான தபால் ஓட்டு உரிமையை வழங்காமல், தமிழக அரசு இழுத்தடிப்பதாகக் குற்றச்சாட்டு எழுந்துள்ளது.

தேர்தல் பணிக்குச் செல்லும் அரசு ஊழியர்கள் வாக்குப்பதிவு அன்று பணியில் இருக்கவேண்டும். எனவே, தபால் வாக்குப்பதிவு முறையில் அவர்கள் தங்களது வாக்குகளைச் செலுத்துவார்கள். ஆனால், இந்தமுறை தேர்தல் பணிக்குச் செல்லும் அரசு ஊழியர்களுக்குத் தபால் வாக்குப்படிவங்கள் இன்னும் வழங்கப்படவில்லை. ‘ஆசிரியர் மற்றும் அரசு ஊழியர்களின் குடும்ப வாக்குகள் அ.தி.மு.க-வுக்கு எதிராகப் பதிவாகும் என்று உளவுத்துறை அரசுக்கு அறிக்கை அளித்துள்ளது. இதனால், தமிழக அரசு வேண்டுமென்றே எங்கள் வாக்குரிமையைத் தடுக்கப்பார்க்கிறது’ என்று அரசு ஊழியர்கள் புகார் எழுப்பியுள்ளனர்.

நீங்க எப்படி பீல் பண்றீங்க