எட்டு வழிச்சாலை... அரசுக்கு நீதிமன்றம் ‘குட்டு’ | Madras HC stay on Chennai Salem highway project - Junior Vikatan | ஜூனியர் விகடன்

வெளியிடப்பட்ட நேரம்: 06:00 (13/04/2019)

எட்டு வழிச்சாலை... அரசுக்கு நீதிமன்றம் ‘குட்டு’

‘எட்டு வழிச் சாலை திட்டத்துக்காக நிலம் கையகப்படுத்தியது செல்லாது. நிலத்தைக் கையகப் படுத்துவதற்காகப் பிறப்பிக்கப்பட்ட அரசாணை ரத்து செய்யப்படுகிறது’ என்று ஏப்ரல் 8-ம் தேதி சென்னை உயர் நீதிமன்றம் அளித்த தீர்ப்பு, அந்தத் திட்டத்தால் பாதிக்கப்பட்டிருந்த விவசாயிகள் நெஞ்சில் பாலை வார்த்திருக்கிறது. நாடாளுமன்றத் தேர்தல் மற்றும் சட்டமன்ற இடைத்தேர்தல்கள் நெருங்கியுள்ள நிலையில், மேற்கண்ட தீர்ப்பு முக்கியத்துவம் பெற்றிருக்கிறது.

கடந்த 2018-ம் ஆண்டு சென்னை - சேலம் இடையே எட்டு வழிச் சாலை திட்டத்துக் கான அறிவிப்பு வெளியிடப் பட்டது. அதன்படி காஞ்சிபுரம், திருவண்ணாமலை, கிருஷ்ணகிரி, தர்மபுரி, சேலம் ஆகிய ஐந்து மாவட்டங்கள் வழியாகச் சாலை அமைக்க மத்திய அரசு 10,000 கோடி ரூபாய் ஒதுக்கீடு செய்தது. இதற்காகச் சுமார் 1,900 ஹெக்டேர் நிலம் கையகப்படுத்தப்படும் என்று அறிவித்த தமிழக அரசு, முதல்கட்டப் பணிகளையும் தொடங்கியது. பல இடங்களில் விவசாயிகளின் நிலங்களில் எல்லைக்கற்கள் நடப்பட்டன. இதனால், அப்பகுதி விவசாயிகளும் பொதுமக்களும் போராட்டத்தில் இறங்கினர்.