வீதியில் போராடும் விவசாயிகள்… கலர் கலராக ரீல் விடும் கட்சிகள்! | Farmers protests and Politicians Promises - Junior Vikatan | ஜூனியர் விகடன்

வெளியிடப்பட்ட நேரம்: 06:00 (13/04/2019)

வீதியில் போராடும் விவசாயிகள்… கலர் கலராக ரீல் விடும் கட்சிகள்!

தேர்தல் வாக்குறுதிகளை நம்பலாமா?

நான்கரை ஆண்டு காலம் விவசாயி, விவசாயம் என்ற வார்த்தைகள் ஆள்பவர்களுக்கு அலர்ஜியாக இருந்தன. இப்போது நாடாளுமன்றத் தேர்தல் பிரசார மேடைகளில், ‘விவசாயிகள், விவசாயத்துக்கு முன்னுரிமை...’ என்று தேன்தடவிய வார்த்தைகள் உச்சரிக்கப்படுகின்றன. இத்தனைக் காலம் என்ன நடந்தது... இப்போது என்ன நடக்கிறது? பார்ப்போம்.

நரசிம்ம ராவ் பிரதமராகவும், மன்மோகன் சிங் நிதி அமைச்சராகவும் இருந்த காங்கிரஸ் ஆட்சிக் காலத்தில்தான், ‘வளர்ச்சி’ என்கிற பெயரில் விவசாயத்தை அழித்தொழிப்பதற்கான வேலைகள் ஆரம்பிக்கப்பட்டன. அதன்பின் பிரதமர் நாற்காலியில் அமர்ந்த மன்மோகன் சிங், ‘‘விவசாயிகளே… விளைநிலைங்களைவிட்டு வெளியேறுங்கள்’’ என்று பிரகடனமே செய்தார். அவரது அரசின் அணுகுமுறை காரணமாக, விவசாயிகள் கொத்துக்கொத்தாகத் தற்கொலை செய்துகொண்டனர்.

2014-ல் நாடாளுமன்றத் தேர்தல் பிரசாரத்தின்போது ‘விவசாயத்தைத் தூக்கிநிறுத்துவோம்’ என்ற வாக்குறுதியுடன் பி.ஜே.பி அரியணை ஏறியது. எம்.எஸ்.சுவாமிநாதன் கமிட்டியின் பரிந்துரைப்படி, ‘வேளாண் விளைபொருள்களுக்குக் குறைந்தபட்ச ஆதரவு விலையை உறுதிசெய்வோம்’ என்பது உட்பட பல வாக்குறுதிகளை அளித்தது பி.ஜே.பி. ஆனால், ஆட்சிக்கு வந்து நான்கரை ஆண்டுகள் ஆன நிலையிலும், அந்தக் கோரிக்கையை மோடி அரசு நிறைவேற்றவில்லை என்பது விவசாயிகளின் மிகப்பெரிய குற்றச்சாட்டு.

நீங்க எப்படி பீல் பண்றீங்க