காட்டுப்பள்ளி துறைமுகம்... விரிவாக்கமா... அழிவுக்கான தொடக்கமா? | Kattupalli Port extension issue - Junior Vikatan | ஜூனியர் விகடன்

வெளியிடப்பட்ட நேரம்: 06:00 (13/04/2019)

காட்டுப்பள்ளி துறைமுகம்... விரிவாக்கமா... அழிவுக்கான தொடக்கமா?

ளர்ச்சி என்பது மக்களுக்கானது. ஆனால், மக்களின் வாழ்வாதாரத்தை அழித்துச் சிலரின் வளர்ச்சிக்காக மட்டுமே திட்டங்கள் கொண்டுவரும்போது வளர்ச்சியே பிரச்னையாகிறது. ஏற்கெனவே, அனல் மின் நிலையங்கள் கலக்கும் கழிவுகளால் மாசடைந்து, வாழ்வையே நரகமாக்கிவிட்ட எண்ணூரில் வாழும் மக்கள், ‘வளர்ச்சி’யை வெறுக்கத்தான் செய்வார்கள். அப்படியொரு மனநிலையில் இப்போது தவித்துக்  கொண்டிருக்கிறார்கள் காட்டுப்பள்ளி மற்றும் அதைச் சுற்றியுள்ள கிராமங்களைச் சேர்ந்த மக்கள்.

எண்ணூர் அடுத்த காட்டுப்பள்ளியில் ‘எல் அண்ட் டி’ நிறுவனத்துக்குச் சொந்தமான துறைமுகத்தைக் கடந்த ஆண்டு அதானி குழுமம் வாங்கியது. அதானியின் காட்டுப்பள்ளி துறைமுக விரிவாக்கத் திட்டமும், அந்தக் குழுமம் அதற்காகச் சுற்றி வளைக்கப்போகும் நிலமும் அந்தப் பகுதி மக்களை அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது. 330 ஏக்கர் பரப்பளவில் அமைந்திருக்கும் தற்போதைய துறைமுகத்தை, 6,200 ஏக்கர்களுக்கு விரிவாக்கத் திட்டமிட்டிருக்கிறது அதானி குழுமம். அதன்படி மேல்மருவத்தூர் அருகிலிருக்கும் தாட்சூரிலிருந்து காட்டுப்பள்ளிவரை சாலை மற்றும் ரயில் பாதைகளையும் அமைக்கவும் திட்டமிட்டுள்ளனர். இதற்காகக் கொற்றலை ஆற்றுப்பகுதி உட்படப் பொதுநிலங்களும், தனியார் நிலங்களுமாகச் சேர்த்து ஆறாயிரம் ஏக்கருக்கும் அதிகமான நிலங்களைக் கையகப்படுத்த உரிமை கோரியுள்ளனர். இதனால் ஊரணம்பேடு, அத்திப்பட்டு, காட்டூர் போன்ற கிராமங்கள் பாதிக்கப்படும். ஆற்றின் வெள்ளநீர் வடிகால் பகுதியும் கையகப்படுத்தும் திட்டத்தில் அடக்கம். இந்தத் திட்டத்தால் செங்கனிமேடு, ராஜந்தோப்பு, ஏப்ரஹாம்புரம், காட்டுப்பள்ளி, களஞ்சி, காட்டூர், சிந்தாமணிபுரம், கருங்காலி ஆகிய ஊர்களில் இருக்கும் மக்களின் மரபு சார்ந்த தொழில் உரிமைகளும் கேள்விக்குள்ளாக்கப்பட்டுள்ளன.