மிஸ்டர் கழுகு: கரன்சி கழகங்கள்... 40-க்கு 400 - 18-க்கு 4,000 - எகிறுது ரேட்... பட்டுவாடா ஸ்டார்ட்! | Mr.Kazhugu - Politics & Current affairs - Junior Vikatan | ஜூனியர் விகடன்

வெளியிடப்பட்ட நேரம்: 06:00 (13/04/2019)

மிஸ்டர் கழுகு: கரன்சி கழகங்கள்... 40-க்கு 400 - 18-க்கு 4,000 - எகிறுது ரேட்... பட்டுவாடா ஸ்டார்ட்!

‘இரண்டா....யிரம்... மூவா...யிரம்... நாலா...யிரம்!’ என்று காமெடி சேனலில் ஓடிய காட்சியைப் பார்த்துக்கொண்டே உள்ளே நுழைந்த கழுகார், ‘‘சிச்சுவேஷன் சீன் சாலப் பொருத்தம்... தமிழ்நாட்டில் இப்போது இப்படித்தான் வாக்குகளை ஏலம் எடுத்துக் கொண்டிருக்கிறார்கள்!’’ என்றார்.

‘‘வாக்காளர்களுக்குப் பணம் கொடுப்பது தமிழகத்துக்கு ஒன்றும் புதிது இல்லையே!’’

‘‘இந்த முறை கரன்சி வழக்கத்தைவிட அதிகமாக ‘கரைபுரள’ போகிறது. கருணாநிதி, ஜெயலலிதா ஆகிய ஆளுமைகளின் இடங்களை நிரப்ப, கழகங்களுக்கு கரன்சிதான் ஒரே மாற்றாக இருக்கிறது. ‘ஆளும்கட்சிகள்மீதான அதிருப்தி, அ.தி.மு.க–வுடைய வாக்குகளைப் பிரிக்கும் அ.ம.மு.க’ என்று தி.மு.க கொஞ்சம் தெம்பாக இருக்கிறது. கொஞ்சம்போல பணம் கொடுத்தாலே போதும் என்பது தி.மு.க தரப்பினரின் எண்ணம். ஆனால், அ.தி.மு.க–வுக்குக் ‘கூட்டணி பலத்தைத் தாண்டி மக்களிடம் இருக்கும் அதிருப்தியைச் சரிக்கட்ட வேண்டியுள்ளது.’ அதற்கு அவர்கள் நம்பியிருக்கிற ஆயுதம் பணம் மட்டுமே!’’

‘‘ஓட்டுக்கு எவ்வளவு நோட்டு?’’

‘‘நாடாளுமன்றத் தொகுதிகளில் ஓட்டுக்கு 250 ரூபாய் என்று முடிவெடுத்திருந்தார்களாம். தி.மு.க–வும் இந்த அளவுக்குக் கொடுக்கத் தயாராக இருப்பது தெரிந்து, இப்போது 300 அல்லது 400 ரூபாய்வரை என்று தொகுதியின் நிலைக்கேற்ப நிர்ணயித்திருக்கிறார்களாம். ஒரு சில வி.ஐ.பி–க்கள் நிற்கும் தொகுதிகளில் இந்தத் தொகை 500 ரூபாய்வரை நிர்ணயிக்கப்பட்டுள்ளது. அதேசமயம் 18 சட்டமன்றத் தொகுதிகளில் ஓட்டுக்கான ரேட் ஏகத்துக்கும் எகிறுகிறது. முதலில் இரண்டாயிரம் ரூபாய் என்றுதான் கணக்குப்போட்டு வைத்திருந்தார்களாம். கருத்துக்கணிப்புகளைப் பார்த்து விட்டு, சில தொகுதிகளில் நாலாயிரம் ரூபாய்வரை தரலாம் என்று திட்டமிட்டிருக்கிறார் களாம்!’’

நீங்க எப்படி பீல் பண்றீங்க