கழுகார் பதில்கள்! | Kazhugar Questions And Answers - Junior Vikatan | ஜூனியர் விகடன்

வெளியிடப்பட்ட நேரம்: 06:00 (13/04/2019)

கழுகார் பதில்கள்!

@கருமாரி கணபதி, மடிப்பாக்கம்.
மொழியா... இசையா?


காற்றின் மொழியே இசை. ‘என்ன மாதிரி காற்று வீசும்’ என்பதைப் பொறுத்துத்தான் நல்லிசையா... நன்மொழியா என்று தீர்மானிக்க முடியும்.

பாலா, மதுரை.
ஆர்.கே. நகர் இடைத்தேர்தலின்போது அ.தி.மு.க அமைச்சர்கள் வீடு உள்படப் பல இடங்களில் நடைபெற்ற வருமானவரி சோதனையை தி.மு.க வரவேற்றது. தற்போது துரைமுருகன் வீட்டில் நடத்தப்படும் சோதனையை ‘பழி வாங்கும் செயல்’ என்று திசை திருப்புகிறதே?


‘அது தக்காளி சட்னி, இது ரத்தம்’. என்ன ஓர் அருமையான சொற்றொடர். இதற்குப் பொருத்தமாகக் கேள்விகளைப் பொங்க வைத்துக் கொண்டே இருக்கும் இந்த அரசியல்வாதிகளைப் பாராட்டியே ஆக வேண்டும்.

நீங்க எப்படி பீல் பண்றீங்க