ஆவேசப் பேச்சுக்கள்... அள்ளிக்கொடுக்குமா வாக்குகளை? | Naam Tamilar Katchi Election Strategy - Junior Vikatan | ஜூனியர் விகடன்

வெளியிடப்பட்ட நேரம்: 06:00 (13/04/2019)

ஆவேசப் பேச்சுக்கள்... அள்ளிக்கொடுக்குமா வாக்குகளை?

சமரசமின்றி தேர்தல் களத்தில் சீமான்!

யிலாடுதுறையில் நாம் தமிழர் கட்சியின் நாடாளுமன்றத் தொகுதி வேட்பாளர் சுபாஷினியை ஆதரித்துப் பிரசாரப் பொதுக்கூட்டம். அதில் ஆவேசமாக இளைஞர் ஒருவர் கர்ஜித்துக்கொண்டிருக்கிறார்… “கஜா புயலில் ஒரு கோடி மக்கள் பாதிக்கப்பட்டார்கள். கோடிக்கணக்கான தென்னை மரங்கள் வேரோடு சாய்ந்தன. பாதிக்கப்பட்ட மக்களைப் பார்க்காமல், ‘சேகுவேராவும் ஃபிடல் காஸ்ட்ரோவும்’ ஹெலிகாப்டரில் வட்டமடித்துவிட்டுச் சென்றார்கள். பிரதமர் மோடி எட்டிக்கூடப் பார்க்கவில்லை. பதினைந்தாயிரம் கோடி ரூபாய் கேட்டோம். மோடி எவ்வளவு கொடுத்தார் தெரியுமா? வெறும் 353 கோடி. பிலிப்பைன்ஸுக்கு 12,000 கோடி கொடுக்கிறார். ஆப்பிரிக்காவில் உள்ள ஒரு நாட்டுக்குப் பஞ்சத்தைப்போக்க 10,000 கோடி கொடுக்கிறார். தமிழகத்துக்குக் கொடுக்க அவருக்கு மனமில்லை. ‘களவாணி’ படத்தில் ஒரு வசனம் வரும். ‘ஏண்டா உன் வீட்டுப் பிள்ளைக்கு பலூன் வாங்கிக்கொடுக்க வக்கில்லை… ஆட்டக்காரிக்கு ஐந்நூறு ரூபாய் கொடுக்குறே…’ என்று. அந்த மாதிரி இருக்கிறது மோடியின் கதை…” என்று பொங்கினார் அந்த இளைஞர். அந்த இளைஞர் நாம் தமிழர் கட்சியின் உள்ளூர் நிர்வாகி. இரு கைகளையும் விரித்து, சீமானைப்போலவே அதே உடல்மொழியுடன் ஆவேசமாகப் பேசுகிறார். அவர் பேசப் பேச எதிரே திரண்டிருக்கும் இளைஞர்கள் கூட்டம் ஆர்ப்பரிக்கிறது.

மயிலாடுதுறையில் மட்டுமல்ல... தமிழகம் மற்றும் புதுச்சேரி என நாற்பது நாடாளுமன்றத் தொகுதிகளிலும் இதே காட்சியைப் பார்க்க முடிகிறது. ஒன்பது ஆண்டுகளுக்கு முன்பு ஊன்றப்பட்ட விதை இது. முதன்முறையாக 2016 சட்டமன்றத் தேர்தலில் போட்டியிட்டது நாம் தமிழர் கட்சி. 234 தொகுதிகளில் வேட்பாளர்கள் களமிறக்கப்பட்டனர். 1.1 சதவிகித வாக்குகள் கிடைத்தன. கடலூர் தொகுதியில் போட்டியிட்ட சீமான், ஐந்தாவது இடத்தைப் பிடித்தார்.

சீமான் களமிறங்கிய கடலூர் தவிர, மற்ற தொகுதிகளில் நின்ற வேட்பாளர்கள் யாரும் கவனிக்கப்படவில்லை. இடைப்பட்ட மூன்றாண்டு காலத்தில் உறுப்பினர் சேர்ப்பு, பயிற்சி முகாம் என்று களத்தில் கடுமையாக உழைத்திருக்கிறது சீமான் டீம். அதன் பலனாக, இன்றைக்குப் பெரும்பாலான தொகுதிகளில் மக்களின் கவனத்தை ஈர்க்கக்கூடிய, மக்கள் மத்தியில் பேசப்படக்கூடிய அளவுக்கு நாம் தமிழர் கட்சி மாறியிருக்கிறது. புதுச்சேரி உட்பட நாற்பது நாடாளுமன்றத் தொகுதிகளிலும் நாம் தமிழர் கட்சி வேட்பாளர்கள் களம்காண்கிறார்கள். இடைத் தேர்தல் நடைபெறும் 18 சட்டமன்றத் தொகுதிகளிலும் போட்டியிடுகிறார்கள்.

நீங்க எப்படி பீல் பண்றீங்க