கடலிலும் தாமரை மலர்ந்தே தீரும்! - தமிழிசை நம்பிக்கை | BJP TN Leader Tamilisai Soundararajan interview - Junior Vikatan | ஜூனியர் விகடன்

வெளியிடப்பட்ட நேரம்: 06:00 (13/04/2019)

கடலிலும் தாமரை மலர்ந்தே தீரும்! - தமிழிசை நம்பிக்கை

ரபரப்புகள், சர்ச்சைகள், விமர்சனங்களுக்கு மத்தியில் இயங்கிவருபவர் தமிழக பி.ஜே.பி தலைவர் தமிழிசை செளந்தரராஜன். தூத்துக்குடி நாடாளுமன்றத் தொகுதியில் தி.மு.க வேட்பாளர் கனிமொழியை எதிர்த்துக் களமிறங்கியிருக்கிறார். மாலை நேரப் பிரசாரத்துக்குக் கிளம்பிக்கொண்டிருந்தவரைச் சந்தித்து சில கேள்விகளை முன் வைத்தோம்.

‘‘தூத்துக்குடி தொகுதியைத் தேர்வு செய்ததற்குக் காரணம் என்ன?’’

‘‘நான் தென் மாவட்டத்தைச் சேர்ந்தவள். மருத்துவக் கல்லூரியில் மூன்றாம் ஆண்டு படித்துக்கொண்டிருக்கும்போது, இதே தூத்துக்குடி மாவட்டம், சாத்தான்குளம் சட்டமன்றத் தொகுதியில் எனது தந்தை குமரி அனந்தன் போட்டியிட்டார். அப்போதே, தேர்தல் பிரசாரம் செய்திருக்கிறேன். அதுமட்டுமல்லாமல், இதற்கு முன்பாக நெல்லை மாவட்டம் ராதாபுரம் சட்டமன்றத் தொகுதியிலும் போட்டியிட்டிருக்கிறேன். கூட்டணியில் ஒதுக்கப்பட்ட தொகுதிகளில், நான் விரும்பிய தொகுதி இது.’’

‘‘உங்களின் சொந்தத் தொகுதியான கன்னியாகுமரியை ஏன் தேர்வு செய்யவில்லை?’’

‘‘குமரியில், கட்சியின் பலம் வாய்ந்த தலைவரான பொன்னார் இருக்கிறாரே. அவர் இருக்கும்போது நான் எப்படி போட்டியிட முடியும்?’’

‘‘துப்பாக்கிச்சூடு நடந்ததை முன்வைத்து, தூத்துக்குடியைப் ‘போராட்ட பூமி’ என்கிறார்களே?’’

‘‘வ.உ.சி., கட்டபொம்மன், பாரதியார் பிறந்த மண் என்றெல்லாம் தூத்துக்குடிக்குப் பெயர் உண்டு. ஆனால், தற்போது போராட்டம், கலவரம் நடந்த ஊர் என்றாகிவிட்டது. துரதிர்ஷ்டவசமாக சில சம்பவங்கள் நடந்திருக்கலாம். ஆனால், அதை வைத்து மட்டுமே கரும்புள்ளியுடன் இந்த ஊரை அடையாளப்படுத்தக்கூடாது. அதையும் தாண்டி முன்னேற்றப்பட வேண்டிய ஊர் என்ற கண்ணோட்டத்தில் பார்க்க வேண்டும்.’’

நீங்க எப்படி பீல் பண்றீங்க