நான் நடத்துவதுதான் தர்ம யுத்தம்! - ராஜ கண்ணப்பன் ரௌத்ரம் | DMK supporter Raja Kannappan interview - Junior Vikatan | ஜூனியர் விகடன்

வெளியிடப்பட்ட நேரம்: 06:00 (13/04/2019)

நான் நடத்துவதுதான் தர்ம யுத்தம்! - ராஜ கண்ணப்பன் ரௌத்ரம்

.தி.மு.க-வில் சீட் கொடுக்கப்படாததால், அக்கட்சி யிலிருந்து விலகிய முன்னாள் அமைச்சர் ராஜ கண்ணப்பன், தி.மு.க-வுக்கு ஆதரவாக அதிரடிப் பிரசாரத்தில் ஈடுபட்டுவருகிறார். அவரைச் சந்தித்தோம்.

‘‘அ.தி.மு.க-வில் சீட் கொடுத்திருந்தால், இந்தப் பிரசாரப் பயணத்தைத் தொடங்கியிருக்க மாட்டீர்கள்தானே?’’

‘‘எனக்கு எம்.பி சீட் தரவில்லை என்பதால், அ.தி.மு.க-விலிருந்து விலகவில்லை. சுயமரியாதைக்கு அங்கு இடம் இல்லாததால் வெளியே வந்தேன். கட்சியில் அனைத்துச் சமூகத்தினரும் சமமாக நடத்தப்பட வேண்டும்.’’

‘‘ஓ.பி.எஸ் தர்மயுத்தம் நடத்தியபோது தென் மாவட்டத் தில் அவருக்கு ஆதரவாக இருந்த நீங்கள், இப்போது அவர் சரியில்லை என்று சொல்கிறீர்களே?’’

‘‘பன்னீர்செல்வம், ‘வாரிசு அரசியல் செய்யமாட்டேன்’ என்று சொல்லித்தான் தர்மயுத்தம் நடத்தினார். இப்போதுதான் தெரிகிறது, அவர் நடத்தியது ‘கரும யுத்தம்’ என்று. ‘வாரிசு களுக்கு சீட் கொடுக்க வில்லை என்றால், கட்சியிலிருந்து வெளியேறி விடுவார்கள்’ என்று எடப்பாடியே என்னிடம் சொன்னார். இப்போது நான் நடத்துவதுதான் தர்மயுத்தம்.’’

‘‘உங்கள் சமுதாய மக்கள் அதிகமுள்ள தொகுதிகளில் மட்டும் பிரசாரம் செய்கிறீர் களே?’’

‘‘அதுபோன்று நான் திட்டமிடவில்லை. முடிந்த அளவு தி.மு.க கூட்டணியினர் போட்டியிடும் பெரும்பாலான தொகுதிகளில் பிரசாரம் செய்கிறேன்.’’

நீங்க எப்படி பீல் பண்றீங்க