பி.ஆர்.ஓ வேலை பார்த்ததை மறக்கவில்லையா? - மதுரை ஆதீனத்துக்கு தினகரன் கேள்வி | Madurai Aadheenam vs TTV Dhinakaran - Junior Vikatan | ஜூனியர் விகடன்

வெளியிடப்பட்ட நேரம்: 06:00 (13/04/2019)

பி.ஆர்.ஓ வேலை பார்த்ததை மறக்கவில்லையா? - மதுரை ஆதீனத்துக்கு தினகரன் கேள்வி

‘‘அ.ம.மு.க-வை அ.தி.மு.க-வுடன் இணைக்கப் பேச்சுவார்த்தை நடந்துகொண்டிருக்கிறது’’ என்று மதுரை ஆதீனம் பேசியதற்குக் கடுமையாக எதிர்வினை ஆற்றியுள்ளார் டி.டி.வி.தினகரன். ‘‘ஆதீனம் முன்பு பார்த்த பி.ஆர்.ஓ வேலையை இப்போது பார்க்கவேண்டாம். தொடர்ந்து இதுபோன்ற பொய்யான தகவலைப் பரப்பிவந்தால், சட்டரீதியான நடவடிக்கை எடுப்பேன்’’ என்று எச்சரித்துள்ளார்.

நித்யானந்தாவை இளைய ஆதீனமாக நியமித் ததிலிருந்தே சர்ச்சையில் சிக்கத்தொடங்கினார் மதுரை ஆதீனம். நித்யானந்தாவிடமிருந்து பிரிந்த பின்பும் வழக்கு, வாய்தாக்கள் அவரைத் தொடர்ந்தன. ஒருகட்டத்தில், ஆதீன மடத்தை அறநிலையத்துறைக் கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவரும் சூழல் ஏற்பட்டது. அப்போது அன்றைய முதல்வராக இருந்த ஜெயலலிதாவைச் சந்தித்து, ஆதரவு தெரிவித்தவர் கடந்த நாடாளு மன்றத் தேர்தல் மற்றும் சட்டமன்றத் தேர்தல்களில் அ.தி.மு.க-வுக்காகப் பிரசாரமும் செய்தார். ஜெயலலிதா சிறையில் அடைக்கப்பட்டபோது உண்ணாவிரதமும் இருந்தார்.

நீங்க எப்படி பீல் பண்றீங்க