“நாங்கள் ஒருபோதும் பாரபட்சம் காட்டுவதில்லை!” - சத்தியம் செய்யும் சத்யபிரதா சாகு | TN Chief Electoral Officer Satyabrata Sahoo interview - Junior Vikatan | ஜூனியர் விகடன்

வெளியிடப்பட்ட நேரம்: 06:00 (17/04/2019)

“நாங்கள் ஒருபோதும் பாரபட்சம் காட்டுவதில்லை!” - சத்தியம் செய்யும் சத்யபிரதா சாகு

‘தேர்தல் நடத்தை விதிமுறைகள், கட்டுப்பாடுகள் எல்லாம் ஆளும் கட்சிக்கு கிடையாது. எதிர்க்கட்சிகளிடம் மட்டுமே தேர்தல் ஆணையம் கெடுபிடி காட்டுகிறது’ என்கிற விமர்சனத்தை எதிர்க்கட்சிகள் உட்பட பல்வேறு தரப்பினரும் வைத்துவருகிறார்கள். இ்ந்தச் சூழலில், தமிழக தலைமைத் தேர்தல் அதிகாரி சத்யபிரதா சாகுவை சந்தித்து சில கேள்விகளை முன்வைத்தோம்.

“வேலூர் தொகுதி தி.மு.க வேட்பாளர் கதிர்ஆனந்த்மீது எஃப்.ஐ.ஆர் பதிவுசெய்யப் பட்டுள்ளது. அடுத்தகட்டமாக என்ன மாதிரியான நடவடிக்கை எடுப்பீர்கள்?”

“அந்த வேட்பாளரின் வீடு, கல்லூரி உள்ளிட்ட மூன்று இடங்களில் வருமானவரித் துறை சோதனை நடத்தி, பணம் கைப்பற்றப்பட்டுள்ளது. அதுகுறித்து வருமானவரித் துறை மற்றும் மாவட்டத் தேர்தல் அதிகாரியிடம் இந்திய தேர்தல் ஆணையம் அறிக்கை கேட்டது. அந்தச் சோதனை குறித்த விவரங்களை  அறிக்கையாக தேர்தல் ஆணையத்துக்கு அனுப்பியிருக்கிறோம். தேர்தல் ஆணையம் இறுதி முடிவை எடுக்கும்.

நீங்க எப்படி பீல் பண்றீங்க