மதச்சார்பின்மை பற்றி பேச காங்கிரஸுக்கு தகுதி இல்லை! - ஜி.கே.வாசன் காட்டம் | Exclusive interview with G.K.Vasan - Junior Vikatan | ஜூனியர் விகடன்

வெளியிடப்பட்ட நேரம்: 06:00 (17/04/2019)

மதச்சார்பின்மை பற்றி பேச காங்கிரஸுக்கு தகுதி இல்லை! - ஜி.கே.வாசன் காட்டம்

த்திய பி.ஜே.பி அரசைக் கண்டித்துப் போராட்டங்களை நடத்திய த.மா.கா, இப்போது பி.ஜே.பி - அ.தி.மு.க கூட்டணியில் இணைந்து போட்டியிடுகிறது. இந்தக் கட்சியின் தலைவர் ஜி.கே.வாசனை தஞ்சாவூரில் சந்தித்தோம்.

‘‘ஹைட்ரோ கார்பன், காவிரி பிரச்னைகளில், பி.ஜே.பி அரசைக் கண்டித்து த.மா.கா நிறையப் போராட்டங்களை நடத்தியது. இப்போது கூட்டணி சேர்ந்து மக்களைச் சந்திப்பது தர்மசங்கடமாக இல்லையா?’’

‘‘விவசாயிகளைப் பாதிக்கக்கூடிய எந்த ஒரு திட்டத்தையும் அனுமதிக்கமாட்டோம். இதில் த.மா.கா உறுதியாகச் செயல்படும். விவசாயிகளின் நியாயத்தையும் உண்மை நிலையையும் எடுத்துக் கூறி, மத்திய, மாநில அரசுகளிடம் வாதாடவும் போராடவும் தயாராக இருப்போம். கூட்டணி மூலம்தான் இதுபோன்ற நியாயமான பிரச்னைகளைத் தீர்க்க முடியும். இதில் தர்மசங்கடம் என்ற பேச்சுக்கே இடமில்லை. பி.ஜே.பி அரசைப் பொறுத்தவரை, குறைகளை நிறைகளாக மாற்றக்கூடியவர்களாக இருக்கிறார்கள். மக்களைப் பாதிக்கக்கூடிய விஷயங்களில் பிடிவாதமாக இருப்பதில்லை. நீட் தேர்வைப் பொறுத்தவரை தமிழ்நாட்டில் இரண்டு கருத்துகள் உள்ளன. நீட் தேர்வில் தமிழக மாணவர்கள் நிறைய பேர் வெற்றிபெற்றுள்ளார்கள். ஆனாலும் கிராமப்புற மாணவர்களின் நலன் கருதி, இதில் மாற்றம் கொண்டுவர முயற்சி செய்வோம்.’’