“தி.மு.க கொத்தடிமைக் கட்சி... கமல்ஹாசன் வசூல்ராஜா...” - விந்தியா விளாசல்! | Interview with Actress Vindhya - Junior Vikatan | ஜூனியர் விகடன்

வெளியிடப்பட்ட நேரம்: 06:00 (17/04/2019)

“தி.மு.க கொத்தடிமைக் கட்சி... கமல்ஹாசன் வசூல்ராஜா...” - விந்தியா விளாசல்!

டந்த 2016- சட்டமன்றத் தேர்தலில் அ.தி.மு.க-வின் பிரசார பீரங்கியாக வலம்வந்தவர் நடிகை விந்தியா. ஜெயலலிதா மறைவுக்குப் பிறகு அரசியலைவிட்டு ஒதுங்கியிருந்த விந்தியா, இந்தத் தேர்தலில், அ.தி.மு.க கூட்டணிக்கு ஆதரவாகக் களம் இறங்கியுள்ளார். அவரிடம் பேசினோம். 

‘‘தி.மு.க தலைவர் ஸ்டாலின், ‘பி.ஜே.பி-யின் அடிமைக் கட்சி அ.தி.மு.க’ என்று சொல்கிறாரே?’’

‘‘மத்தியில் ஆட்சி புரிகின்ற பி.ஜே.பி-க்கு ஐந்து தொகுதிகள் கொடுத்த நாங்கள் அடிமை என்றால், தேறவே தேறாது என்று இந்திய மக்களால் கைகழுவிவிடப்பட்ட காங்கிரஸ் கட்சிக்குப் பத்து தொகுதிகள் கொடுத்த தி.மு.க கொத்தடிமை கட்சிதானே?’’

‘‘நடிகர் கமல், ‘தமிழ்நாட்டில் பெண்களுக்குப் பாதுகாப்பு இல்லை’ என்கிறாரே?’’  

‘‘சினிமாவில் 50 ஆண்டுகளாக நடித்தபோது கிடைக்காத மனநிறைவு அரசியலில் கிடைத்திருப்பதாகக் கமல் சொல்லியிருக்கிறார். உண்மையில் அவருக்குக் கிடைத்திருப்பது மனநிறைவு இல்லை... பண நிறைவு. ஏற்கெனவே ‘வசூல் ராஜா’ படத்தில் கமல் நடித்ததை மக்கள் பார்த்தார்கள். இப்போது மக்கள் நீதி மய்யம் கட்சி சார்பாகப் போட்டியிட பத்தாயிரம் ரூபாய் பணம் கட்டி, யார் வேண்டுமானாலும் விண்ணப்பம் போடலாம் என்று அறிவித்தபோதே நிச்சயம் அரசியலிலும் அவர் ஒரு வசூல்ராஜா என நிரூபித்துவிட்டார். கமல் வைத்திருக்கிறது பேட்டரி இல்லாத டார்ச். அது மக்களுக்கு ஒளியைத் தராது. கையில் பிடித்துக்கொண்டு இருப்பவர்களுக்கு வலியைத்தான் தரும்.’’

நீங்க எப்படி பீல் பண்றீங்க