“தேர்தல் ஆணையம் சுதந்திரமாகவே செயல்படுகிறது!” - நரேஷ் குப்தா நச்! | Former Election Commissioner Naresh Gupta interview - Junior Vikatan | ஜூனியர் விகடன்

வெளியிடப்பட்ட நேரம்: 06:00 (17/04/2019)

“தேர்தல் ஆணையம் சுதந்திரமாகவே செயல்படுகிறது!” - நரேஷ் குப்தா நச்!

மிழகத்தின் திருமங்கலம் தொகுதி இடைத்தேர்தல், 2009-ம் ஆண்டு பொதுத் தேர்தல் என முக்கியத் தேர்தல் காலங்களில் தமிழகத் தேர்தல் அதிகாரியாகப் பணியாற்றியவர் நரேஷ் குப்தா. பணியிலிருந்து ஓய்வுபெற்றுவிட்ட அவரிடம், 2019 நாடாளுமன்றத் தேர்தல் தொடர்பாகத் தேர்தல் ஆணையத்தின்மீது வைக்கப்படும் குற்றச்சாட்டுகள், தேர்தல் நடத்தை விதிமுறைகள் குறித்துபேசியதிலிருந்து...  

‘‘2009-ம் ஆண்டு தேர்தலுக்கும் 2019-ம் ஆண்டு தேர்தலுக்கும் வித்தியாசத்தை உணரமுடிகிறதா?”

‘‘தேர்தலுக்கான சட்டங்களைப் பொறுத்தவரை எதுவும் மாறவில்லை. பணப் பட்டுவாடாவைத் தடுப்பதற்கான தேர்தல் நடத்தை விதிகளை ஆணையம் இன்னும் வலுப்படுத்தியுள்ளது. தேர்தல் பணச் செலவுகளுக்கு எனத் தனி அலுவலர் நியமிக்கப்பட்டுள்ளார். வருமானவரித் துறையும் விதிகளை நடைமுறைப்படுத்துவதில் ஈடுபடுத்தப்படுகிறது. வேட்பாளர்கள் தேர்தலுக்கு எனத் தனியாக வங்கிக் கணக்கு வைத்திருக்க வேண்டும். விதிகளை இறுக்கியிருப்பதால் நிறைய இடங்களில் பணம் பறிமுதல் செய்யப் பட்டிருக்கிறது. முந்தைய தேர்தல்களை ஒப்பிடுகையில் இந்தத் தேர்தலில் கிரிமினல்கள் போட்டியிடு வதைத் தடை செய்வதற்கு, வேட்புமனுத் தாக்கல் செய்பவர்களைப் பற்றிய விரிவான தகவல்களைப் பெறுவது கட்டாயமாக்கப் பட்டிருக்கிறது.’’

நீங்க எப்படி பீல் பண்றீங்க