எலெக்‌ஷன் எக்ஸ்பிரஸ் | Parliament Election Express News - Junior Vikatan | ஜூனியர் விகடன்

வெளியிடப்பட்ட நேரம்: 06:00 (17/04/2019)

எலெக்‌ஷன் எக்ஸ்பிரஸ்

‘‘என் தங்கை கனிமொழி!’’ நெகிழ வைத்த ஸ்டாலின்!

தூ
த்துக்குடி நாடாளுமன்றத் தொகுதியின் தி.மு.க வேட்பாளர் கனிமொழி மற்றும் விளாத்திகுளம் தொகுதி தி.மு.க வேட்பாளர் ஜெயகுமார் ஆகியோரை ஆதரித்து தி.மு.க தலைவர் ஸ்டாலின் தூத்துக்குடியில் 10-ம் தேதி பேசினார். “கனிமொழி சிறந்த கவிஞர், எழுத்தாளர், பத்திரிகையாளர், பெண் போராளி, சமூகப் போராளி என பலமுகங்களைக் கொண்டவர். சிறந்த நாடாளுமன்ற உறுப்பினர் விருதைப் பெற்றவர். ‘நாடாளுமன்றத்தின் டைகர்’ எனவும் அழைக்கப்படுகிறார். அவர் தூத்துக்குடிக்கு கிடைத்த ஒரு பொக்கிஷம். அந்தப் பொக்கிஷத்தை நீங்கள் பயன்படுத்திக்கொள்ள வேண்டும். மக்கள் பிரச்னைகளைத் தீர்ப்பதிலும் டைகராக செயல்படுவார். தூத்துக்குடியில் கனிமொழி நிற்பதை கலைஞரே நிற்கிறார் என்று எடுத்துக் கொள்ளலாம். கலைஞரின் மகனாக கனிமொழியின் அண்ணனாக என் தங்கைக்கு இங்கு வந்து வாக்கு கேட்கிறேன்” என சென்டிமென்டாகப் பேசினார். இக்கூட்டத்தில் ‘தங்கை’ என்ற சொல்லை மட்டும் 8 முறை உச்சரித்தார். முதல் முறை ‘என் தங்கை’ எனச் சொன்னதுமே கனிமொழியின் கண்களில் கண்ணீர் தளும்பியது. ஒவ்வொரு முறை உச்சரிப்பிலும் அழுகையை அடக்க முடியாத அவரது உருக்கத்தைப் பார்த்து உடன்பிறப்புகளும் உருகினார்கள். ஸ்டாலின் உரையை முடிக்கும் வரை கனிமொழியின் பார்வை அண்ணன் ஸ்டாலினை நோக்கியே இருந்தது.