‘‘ஜெயலலிதாவுக்குச் சிறையில் எதுவும் நடந்திருக்கலாம்!’’ - சந்தேகம் எழுப்பும் திருமுருகன் காந்தி | Thirumurugan Gandhi interview about Jayalalitha death - Junoir Vikatan | ஜூனியர் விகடன்

வெளியிடப்பட்ட நேரம்: 06:00 (17/04/2019)

‘‘ஜெயலலிதாவுக்குச் சிறையில் எதுவும் நடந்திருக்கலாம்!’’ - சந்தேகம் எழுப்பும் திருமுருகன் காந்தி

மூக செயற்பாட்டாளரான திருமுருகன் காந்தி, இந்திய இறையாண்மைக்கு எதிராகப் பேசியதாகக் கைது செய்யப்பட்டு வேலூர் மத்திய சிறையில் அடைக்கப்பட்டிருந்தார். சிறையில் அவர் தனிமைப்படுத்தப்பட்டு உடல்ரீதியாகவும் மனரீதியாகவும் துன்புறுத்தலுக்கு உள்ளாக்கப்பட்டதாக புகார்கள் எழுந்தன. பின்னர் பிணையில் வெளிவந்து, உரிய சிகிச்சைகள் மேற்கொண்ட பிறகும் இன்றுவரை அவர் முழுமையாக குணமடையவில்லை. மருந்து- மாத்திரைகள் எடுத்துக்கொண்டு சோர்வுடன் இருக்கிறார் திருமுருகன்காந்தி. நாடாளுமன்றத் தேர்தலில், பிரசாரம் செய்யவும் திட்டமிட்டிருந்தார் திருமுருகன் காந்தி. ஆனால், அதற்கு தேர்தல் ஆணையம் அனுமதி மறுத்துள்ளது. இந்தநிலையில்தான் அவரிடம் பேசினோம்...

‘‘இந்தத் தேர்தலில் உங்கள் நிலைப்பாடு என்ன?’’

‘‘ஒவ்வொரு தேர்தலுக்கும் எங்கள் நிலைப்பாடு மாறாது. ஆட்சியில் உள்ள அரசு, மக்களுக்காக என்ன மாதிரியான திட்டங்களைக் கொண்டு வந்திருக்கிறது, என்னென்ன கொள்கைகளை முன்னெடுத்திருக்கிறார்கள் என்று பார்ப்போம். அப்படிப் பார்க்கையில் மோடி அரசு, மக்களுக்கு எதிரான அரசுதான். மோடி பிரதமர் வேட்பாளராக அறிவிக்கப்பட்டு, சென்னை வந்தபோதே நாங்கள் கறுப்புக்கொடி காட்டினோம். எனவே,  பி.ஜே.பி–யை அப்போது முதல் இப்போதுவரை எதிர்த்துத்தான் வருகிறோம். நாங்கள் எப்போதும் மக்கள் குரலாகவே இருப்போம். அதில் எந்த மாற்றமும் இல்லை.’’