“என் பேரை கேட்டாலே ரங்கசாமிக்கு அலர்ஜி!” - வெடிக்கும் முதல்வர் நாராயணசாமி | V.Narayanasamy talks about N.Rangaswamy - Junior Vikatan | ஜூனியர் விகடன்

வெளியிடப்பட்ட நேரம்: 06:00 (17/04/2019)

“என் பேரை கேட்டாலே ரங்கசாமிக்கு அலர்ஜி!” - வெடிக்கும் முதல்வர் நாராயணசாமி

புதுச்சேரியில் மக்களவைத் தேர்தல் களம் சூடு பிடித்திருக்கிறது. இதை காங்கிரஸுக்கும் என்.ஆர்.காங்கிரஸுக்குமான போட்டி என்று சொல்வதைவிட, முதல்வர் நாராயணசாமிக்கும் முன்னாள் முதல்வர் ரங்கசாமிக்குமான பலப்பரீட்சை என்று சொல்வது பொருத்தமாக இருக்கும். அந்த அளவுக்கு இந்த இரண்டு ‘சாமி’களின் பிரசாரங்களில் அனல் தெறிக்கிறது. பிரசாரத்தில் சூறாவளியாகச் சுழன்றுவரும் முதல்வர் நாராயணசாமியை அவரது இல்லத்தில் சந்தித்தோம். 

“பி.ஜே.பி-யின் தேர்தல் அறிக்கை குறித்து?”

“அது அரசியல் மற்றும் மதச் சாயம் பூசப்பட்ட வெற்று அறிக்கை. ‘ராமர் கோயிலைக் கட்டுவோம்’ என்கிற பழைய பல்லவியையேப் பாடியிருக்கிறார்கள். இந்திய அரசியலமைப்பு சட்டப் பிரிவு 370-யை நீக்குவது, ஜம்மு-காஷ்மீர் சிறப்பு அதிகாரத்தை நீக்குவது என்று இவர்கள் கூறியிருக்கும் அம்சம் எதுவுமே புதிது இல்லை. ‘நதிகளை இணைப்போம்’ என்கிறார்கள். இவர்கள் மட்டுமா அதைக் கூறுகிறார்கள்? அனைத்துக் கட்சிகளும் காலம் காலமாக அதைத்தானே கூறி வருகின் றன. நாங்களும்தான் கூறியிருக்கிறோம். ராவ் கமிட்டி காலத்திலிருந்தே அது கூறப்பட்டு வருகிறது. ‘விவசாயக் கடன்களைத் தள்ளுபடி செய்ய வேண்டும்’ என்று விவசாயிகள் போராட்டம் நடத்துகிறார்கள். ஆனால், விவசாயிகள், வங்கியில் ஒரு லட்சம் ரூபாய் கடன் வாங்கினால், அதற்கான வட்டியைத் தள்ளுபடி செய்வதாக பி.ஜே.பி தேர்தல் அறிக்கையில் கூறியிருப்பது ஒரு விஷயமே கிடையாது.”

நீங்க எப்படி பீல் பண்றீங்க