மிஸ்டர் கழுகு: தேர்தல் உறியடி - 2016 ஃபார்முலா - ரிப்பீட்டா... ரிவிட்டா? | Mr.Kazhugu - Politics & Current affairs - Junior Vikatan | ஜூனியர் விகடன்

வெளியிடப்பட்ட நேரம்: 06:00 (17/04/2019)

மிஸ்டர் கழுகு: தேர்தல் உறியடி - 2016 ஃபார்முலா - ரிப்பீட்டா... ரிவிட்டா?

வேகவேகமாக வந்தமர்ந்த கழுகாருக்கு, எலுமிச்சை ஜூஸ் கொடுத்து உபசரித்த நாம், ‘‘இப்போது ரிலீஸ் ஆகும் பெரும்பாலான சினிமாக்களிலும் அரசியல்வாடை தூக்கியடிக்கிறதாமே. ‘ஹிப்ஹாப் தமிழா’ ஆதி நடித்து கடந்த வாரத்தில் வெளியான ‘நட்பே துணை’ படத்தில் செமத்தையாக வெளுத்து வாங்குகிறார்களாமே’’ என்று நம்முடைய சினிமா அறிவைக் காட்டினோம்.

‘‘நீர், ‘நட்பே துணை’ என்கிறீர். ஆனால், ‘நட்பே வினை’ என்று அ.தி.மு.க கூட்டணியில் அனல் அடிக்கிறது. நன்றாகப் போய்க்கொண்டிருந்த பிரசாரத்தை மோடியும் கட்கரியும் சொதப்பியதில் கூட்டணித் தலைவர்கள் பலரும் கொஞ்சம் அப்செட்தான்’’ என்றார்.

‘‘என்ன சொதப்பல்?’’

‘‘ஓ.பி.எஸ் மகனுக்குத்தான் பிரசாரம் செய்கிறோம் என்பதுகூடத் தெரியாமல், தேனி பிரசாரப் பொதுக்கூட்ட மேடையில் வைத்து, ‘வாரிசு அரசியலை ஒழிப்போம்’ என்று மோடி பேசிவைக்க, கூட்டம் ஆர்ப்பரித்தது. ஆனால், ஓ.பி.எஸ் மற்றும் அவருடைய மகன் இருவரும் நொந்து நூடுல்ஸ் ஆகிவிட்டனர். ‘ராகுல், ஸ்டாலினை விளாசுவதாக நினைத்துக்கொண்டு சேம் சைடு கோல் போட்டுவிட்டாரே’ என்று அப்பாவும் மகனும் புலம்பித்தீர்க்க, கூட இருந்த சிலர் இதை உள்ளூர ரசித்துச் சிரித்த கதையும் நடந்திருக்கிறது.’’

‘‘பாவம்தான்.’’

‘‘சேலத்தில் நடந்த பொதுக்கூட்ட மேடையில் எடப்பாடியையும் ராமதாஸையும் வைத்துக் கொண்டே, ‘எட்டு வழிச்சாலைத் திட்டத்தை நிறைவேற்றியே தீருவோம்’ என்று மத்திய அமைச்சர் நிதின் கட்கரி சூளுரைத்தது, தலைவர் களை தலைகுனிய வைத்துவிட்டது. உயர் நீதிமன்றத் தீர்ப்பை அடுத்து, ‘எட்டுவழிச்சாலை திட்டத்தைக் கைவிட வேண்டும்’ என்று அன்புமணி ராமதாஸ் கோரிக்கை வைக்க, ‘நாங்கள் மேல்முறையீடு செய்யப்போவதில்லை’ என்று அ.தி.மு.க அமைச்சர்களும் ஒப்புக்காவது சொல்லி, மக்களிடையே நல்லபெயர் எடுத்து வைத்திருந்தனர். அதற்கும் வேட்டு வைத்து விட்டார் கட்கரி. போதாக்குறைக்கு மத்திய அமைச்சர் பியூஸ் கோயல் வேறு, ‘தமிழகத்தில் நீட் தேர்வு கண்டிப்பாக நடக்கும்’ என்று அழுத்தம் கொடுத்தார். இவர்களின் பேச்சுகளை வைத்து, சமூக ஊடகத்தில் சடுகுடு ஆடுகிறார்கள். அ.தி.மு.க தலைவர்கள் கடுகடுவாகியிருக் கிறார்கள்!’’

நீங்க எப்படி பீல் பண்றீங்க