நயன்தாராவுக்காகப் பதறிய ஸ்டாலின் நாராயணனுக்காகப் பதறவில்லையே? - விளாசும் ஏ.பி.என் சுவாமி | HINDU MAKKAL PATHUKAPPU PADAI vs Dravidar Kazhagam - Junior Vikatan | ஜூனியர் விகடன்

வெளியிடப்பட்ட நேரம்: 06:00 (17/04/2019)

நயன்தாராவுக்காகப் பதறிய ஸ்டாலின் நாராயணனுக்காகப் பதறவில்லையே? - விளாசும் ஏ.பி.என் சுவாமி

பொள்ளாச்சி பாலியல் சம்பவத்தை, இந்துக் கடவுள் கிருஷ்ணனுடன் ஒப்பிட்டு தி.க. தலைவர் வீரமணி பேசியதைத் தொடர்ந்து, ‘இந்துக்களுக்கு எதிரான கட்சிகளுக்கு வாக்களிக்கக் கூடாது’ என்கிற கோஷத்துடன் ‘இந்து மக்கள் பாதுகாப்புப் படை’ என்கிற இயக்கம் போராட்டத்தில் குதித்துள்ளது. அவ்வியக் கத்தின் துணைத் தலைவர் அனந்த பத்மநாபச்சாரியார் என்கிற ஏ.பி.என்.சுவாமியிடம் பேசினோம்.

‘‘தேர்தல் நேரத்தில் ஏன் இப்படி ஒரு போராட்டத்தை முன்னெடுக்கிறீர்கள்?’’

‘‘இந்து திருமணச் சடங்குகளை கொச்சைப் படுத்தி ஸ்டாலினும், திருப்பதி ஏழுமலையானை விமர்சித்து கனிமொழியும் பேசுகிறார்கள். இப்போது, கிருஷ்ணன் குறித்து வீரமணி அவதூறாகப் பேசியதால்தான் நாங்கள் போராட வேண்டிய சூழல் உருவானது. தேர்தலுக்கும் எங்கள் போராட்டத்துக்கும் சம்பந்தமில்லை. இந்துக்களுக்கு பாதுகாப்பு தராத கட்சிகளை ஆதரிக்காதீர்கள் எனப் பிரசாரம் செய்கிறோம்.’’