அ.தி.மு.க-வும் தி.மு.க-வும் கூட்டுக் குடும்பம்! - கழகங்களை கலாய்க்கிறார் கமல்ஹாசன் | Makkal Needhi Maiam Leader Kamal Haasan interview - Junior Viaktan | ஜூனியர் விகடன்

வெளியிடப்பட்ட நேரம்: 06:00 (17/04/2019)

அ.தி.மு.க-வும் தி.மு.க-வும் கூட்டுக் குடும்பம்! - கழகங்களை கலாய்க்கிறார் கமல்ஹாசன்

க்கள் நீதி மய்யம் கட்சி தொடங்கி ஓராண்டு நிறைவடைந்த நிலையிலேயே, பொதுத் தேர்தலைச் சந்திக்கிறது.  பட்டதாரிகளை மட்டுமே வேட்பாளராக அறிவித்திருக்கிறார் கட்சியின் தலைவர் கமல்ஹாசன். நகரம், கிராமம் எனப் பார்க்காமல், 40 தொகுதிகளிலும் தீவிரப் பரப்புரையில் இருந்தவரைச் சந்தித்தோம்.

‘‘மக்கள் நீதி மய்யம் மக்களின் மாற்றத்துக்கான கட்சி என்கிறீர்கள். மக்கள் அதற்குத் தயாராகிவிட்டார்களா?’’

‘‘அப்படித்தான் நினைக்கிறேன். நானும் மக்களில் ஒருவன்தான். நான் மாற்றத்துக்குத் தயாராகித்தான், அரசியல் களத்துக்கே வந்திருக்கிறேன். ஒரு நடிகனாக, நட்சத்திர மாக மக்கள் என்மேல் செலுத்திய அன்புக் கும் தற்போது செலுத்திவரும் அன்புக்கும் நிறைய வித்தியாசங்கள் உள்ளன. அதை என்னால் உணரமுடிகிறது. முதலில் இதைக் கற்பனை என்று நினைத்தேன். ஆனால், தற்போது மக்கள் என்மீது செலுத்தும் அன்பு அளப்பரியது என்று உணர்ந்துகொண் டேன். மக்களின் கண்களிலேயே மாற்றம் தெரிகிறது.’’

‘‘மக்கள் நீதி மய்யம் என்று சொன்ன தும் மக்களுக்கு என்ன நினைவுக்கு வர வேண்டும் என்று நினைக்கிறீர்கள்?’’

‘‘நடுநிலைமை. மக்கள் நலன் தான் எங்கள் நோக்கம். ஆகம வழிபாட்டு முறைப்படி இப்படித் தான் எப்போதும் இருக்க வேண்டும் என்றில்லை. மக்கள் நலனுக்காக எதையும் மாற்றலாம்.’’