தி.மு.க. - அ.தி.மு.க. ஆட்சி அவலங்கள்... ஓர் ஒப்பீடு! | Comparison of ADMK and DMK Reigns Tragedy - Junior Viaktan | ஜூனியர் விகடன்

வெளியிடப்பட்ட நேரம்: 06:00 (17/04/2019)

தி.மு.க. - அ.தி.மு.க. ஆட்சி அவலங்கள்... ஓர் ஒப்பீடு!

நாடாளுமன்றத் தேர்தல் களம் சட்டமன்றத் தேர்தல் போல ஆகிவிட்டது. மத்திய அரசு தொடர்பான கருத்துகளை வைப்பதற்குப் பதிலாக, மாநில அரசு பற்றி பேசிக் கொண்டிருக்கிறார்கள். ஆட்சியின் சாதனைகளைப் பட்டியல் போடுகிறார் முதல்வர் எடப்பாடி பழனிசாமி. வேதனைகளை சொல்லிக் கொண்டிருக்கிறார் எதிர்க்கட்சித் தலைவர் மு.க. ஸ்டாலின்.

‘’தி.மு.க. ஆட்சிக்கு வந்தால் சட்டம் ஒழுங்கு கெட்டுப் போகும். பெண்களுக்குப் பாதுகாப்பு இருக்காது’’ என்று சீறிப்பாய்கிறார் எடப்பாடி.

‘’அயனாவரம், பொள்ளாச்சி பாலியல் கொடுமைகள் எந்த ஆட்சியில்...’’ என்று பதிலடி கொடுக்கிறார் ஸ்டாலின்.

இருவரின் மோதல் சமயங்களில் எல்லை மீறியதாக மாறி, வார்த்தைகளும் தடிக்கின்றன. இது நீதிமன்றம் வரை சென்று, ‘தலைவர்களே சாந்தமாக உரையாடுங்கள்’ என்று நீதிமன்றமே அறிவுரை சொல்லும் நிலைக்குப் போய்க் கொண்டிருக்கிறது.

உண்மையில், இரண்டு கட்சிகளின் ஆட்சிக்கால அராஜகங்கள் ஒன்றுக்கொன்று சளைத்தவை அல்ல. ஜெயலலிதாவுக்கு நீதிமன்றம் தண்டனை விதித்ததும் மூன்று மாணவிகளை பஸ்சில் உயிருடன் எரித்தார்கள் அ.தி.மு.க-வினர். அழகிரிக்கு எதிராக கருத்துக் கணிப்பு வெளியிட்ட தினகரன் நாளிதழ் அலுவலகத்தில் மூன்று பேரை கொளுத்தினார்கள் தி.மு.க-வினர் தி.மு.க மற்றும் அ.தி.மு.க. ஆட்சிக் காலங்களில் நடந்த அவலங்கள், அராஜகங்கள்... அட்டூழியங்கள் பற்றி சாம்பிளாக ஓர் ஒப்பீடு இங்கே...

நீங்க எப்படி பீல் பண்றீங்க