கட்டாயம் வரும் எட்டு வழிச் சாலை! - கட்கரியின் பேச்சு... கட்சி ஓட்டும் போச்சு! | Nitin Gadkari promises for Chennai to Salem eight way Green road - Junior Vikatan | ஜூனியர் விகடன்

வெளியிடப்பட்ட நேரம்: 06:00 (17/04/2019)

கட்டாயம் வரும் எட்டு வழிச் சாலை! - கட்கரியின் பேச்சு... கட்சி ஓட்டும் போச்சு!

ட்டு வழிச் சாலைத் திட்டம்  தமிழகத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது என்றால் எட்டு வழிச் சாலைக்கு எதிரான தீர்ப்பு வந்த பிறகும் ‘உயர் நீதிமன்றத்தில் முதன் முதலில் யார் வழக்கு போட்டது... தி.மு.க-வா? பா.ம.க அன்புமணியா? விவசாயி கிருஷ்ணமூர்த்தியா...’  என்ற வாதம் அரசியல் பிரசாரத்தையும் தாண்டி பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

இதுபற்றி விவசாயி கிருஷ்ணமூர்த்தியிடம் கேட்டதற்கு, ‘`தருமபுரி மாவட்டம் அ.பள்ளிப்பட்டி கிராமத்தில் நானும் என் மனைவியும் வசிக்கிறோம். எங்களுக்கு ஒரு மகன், மகள் இருக்கிறார்கள். இங்கு எனக்குச் சொந்தமாக 10 ஏக்கர் நிலம் இருக்கிறது. இந்த நிலத்தில் பாடுபட்டு என்னுடைய இரண்டு குழந்தைகளையும் நன்றாகப் படிக்கவைத்து திருமணம் செய்துகொடுத்து அவர்களுக்கு நல்ல வாழ்க்கையை அமைத்துக் கொடுத்திருக்கிறேன்.

தற்போது இந்த நிலம்தான் எங்களுக்குச் சோறு போடுகிறது. இந்த நிலம் எங்களுடைய வாழ்வாதாரம். இந்த நிலம் இல்லையென்றால் நாங்கள் இல்லை. இந்தச் சூழ்நிலையில், கடந்த 26-2-2018-ம் தேதி சென்னை வந்த மத்திய நெடுஞ்சாலைத் துறை அமைச்சர் நிதின் கட்கரி, ‘சேலம் டூ சென்னை எட்டு வழிச் சாலை’ திட்டத்தை அறிவித்தார்.