கொல்லப்பட்டவர்களின் உடல்... தீர்க்கப்படாத சந்தேகங்கள்! | Forensic Doctor doubts about Thoothukudi massacre postmortem Report - Junior Vikatan | ஜூனியர் விகடன்

வெளியிடப்பட்ட நேரம்: 06:00 (17/04/2019)

கொல்லப்பட்டவர்களின் உடல்... தீர்க்கப்படாத சந்தேகங்கள்!

ஸ்டெர்லைட் போஸ்ட்மார்ட்டம் ரிப்போர்ட்ஸ்!

தூத்துக்குடி, ஸ்டெர்லைட் ஆலையை மூடக்கோரி போராடிய மக்கள்மீது காவல்துறை நடத்திய துப்பாக்கிச்சூடு மறக்கமுடியா பெருந்துயரம்! துள்ளத் துடிக்க சுட்டுக்கொல்லப்பட்ட 13 பேர்களின் உடற்கூராய்வு சமீபத்தில் வெளியானது. இந்த அறிக்கைகளை ஆராய்ந்து, பல்வேறு சந்தேகங்களை எழுப்பியுள்ளார் தடயவியல்துறை மருத்துவரான புகழேந்தி.

அவரிடம் பேசுகையில், ‘‘சுட்டுக்கொல்லப்பட்ட ஸ்னோலின், கந்தையா, தமிழரசன், செல்வசேகர் ஆகியோரின் உடல்களுக்கு 2018-ம் ஆண்டு மே மாதம் 24, 25-ம் தேதிகளில் நடைபெற்ற பிரேதப் பரிசோதனை ஆய்வு மற்றும் அறிக்கைகள் அவசரக் கோலத்தில் நடந்துள்ளன என்பதை உடற்கூராய்வு அறிக்கைகளை வைத்தே சொல்ல முடியும். போலீஸ் ஸ்டாண்டிங் ஆர்டர் 151-ன்படி இறந்தவர்கள் அணிந்திருந்த உடை, குண்டு பாய்ந்த இடத்தின் அருகிலிருந்து எடுக்கப்பட்ட தோல் மாதிரிகள் போன்றவை பாதுகாக்கப்பட வேண்டும். மேலே குறிப்பிடப்பட்ட நான்கு பேரின் உடற்கூராய்வின்போது இவை கடைப்பிடிக்கப்படவில்லை என்பதை உடற்கூராய்வு அறிக்கையின் மூலம் அறிய முடிகிறது. ஜூன் 6, 2018 அன்று உடற் கூராய்வு செய்யப்பட்டபோது, இவை அனைத்தும் பாதுகாக்கப்பட்டுப் பதிவு செய்யப்பட்டுள்ளன. ஜூன் 6-ம் தேதி நடந்த இரண்டாவது ஆய்வின்போது கூடுதலாக புதுச்சேரி ஜிப்மர் மருத்துவர் வினோத் அசோக் சவுத்திரியும் இணைந்துள்ளார். முதல் முறை உடற்கூராய்வின்போது இந்த நடைமுறையைப் பின்பற்றாதது ஏன் என்ற கேள்வி எழுகிறது.