இந்த முடிவை எடுத்தது ஏன் தெரியுமா? - கமலுக்கு அனிதா சகோதரர் பதில் | Ariyalur Anitha's Brother support to VCK - Junior Vikatan | ஜூனியர் விகடன்

வெளியிடப்பட்ட நேரம்: 06:00 (17/04/2019)

இந்த முடிவை எடுத்தது ஏன் தெரியுமா? - கமலுக்கு அனிதா சகோதரர் பதில்

நாடாளுமன்றத் தேர்தல் மற்றும் 18 தொகுதிகளுக்கான சட்டமன்ற இடைத்தேர்தலுக்காக அனைத்துக் கட்சித் தலைவர்களும் தீவிர வாக்குச் சேகரிப்பில் ஈடுபட்டு வருகின்றனர். இந்த நிலையில், மக்கள் நீதி மய்யம் கட்சியின் தலைவரும் நடிகருமான கமல்ஹாசன், வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ளார். அதில், அவர் கோபமடைந்து டி.வி ரிமோட்டைத் தூக்கியடித்து, டி.வி-யை உடைப்பதுபோன்ற காட்சி இடம்பெற்றிருக்கிறது. மேலும், “நீங்கள் யாருக்கு ஓட்டுப்போட வேண்டுமென்பதை ‘நீட்’டால் தன் பிள்ளையை இழந்தார்களே, அவர்களிடம் கேளுங்கள்” என்று குறிப்பிட்டுள்ளார். இந்த வீடியோ பதிவு சமூக வலைத்தளங்களில் வைரலாகிவரும் சூழலில், நீட் தேர்வால் உயிரிழந்த அரியலூர் மாணவி அனிதாவின் சகோதரர் மணிரத்தினம், இதற்குப் பரபரப்பான பதிலைக் கொடுத்துள்ளார்.

மணிரத்தினத்திடம் பேசினோம். “அன்புக்கும் மதிப்புக்கும் உரிய அண்ணன் கமலின் உண்மையான ரசிகன் நான். நடிப்புக்காக மட்டுமல்ல, திரையிலும் நிஜத்திலும் மரபுகளை உடைக்க நினைக்கும் கலைஞன். மற்றவர்கள் என்ன நினைத்தால் என்ன, தனக்குச் சரியென்றுபடுவதைச் செய்யும் துணிச்சல்காரர். ரசிகர் மன்றங்களைக் கலைத்து நற்பணி மன்றங்களாக மடைமாற்றம் செய்தவர். அவரைப் பார்த்துத்தான் 18 முறை நான் ரத்ததானம் செய்தேன். உடல்தானமும் செய்துள்ளேன். புதிதாக யார் அரசியலுக்கு வந்தாலும் மகிழ்ச்சிதான். அண்ணன் கமல் சொன்னதுபோல யாருக்கு வாக்களிக்கக் கூடாது என்பதில்... அதாவது, பாசிச பி.ஜே.பி கூட்டணிக்கு ஒருபோதும் வாக்களிக்கக் கூடாது என்பதில் நானும் எங்கள் குடும்பமும் தெளிவாகவே இருக்கிறோம்.

நீங்க எப்படி பீல் பண்றீங்க