சந்திரசேகர ராவின் சரியாத கோட்டை - தெலங்கானா! | Chandrashekar Rao party domination in Telangana - Junior Vikatan | ஜூனியர் விகடன்

வெளியிடப்பட்ட நேரம்: 06:00 (20/04/2019)

சந்திரசேகர ராவின் சரியாத கோட்டை - தெலங்கானா!

தெலங்கானா மாநிலம் சந்திரசேகர் ராவின் அசைக்க முடியாத கோட்டை! இன்னும் 20 வருடங்களுக்கு, அங்கே அவரை அசைக்க ஆட்கள் இல்லை எனும் அளவுக்கு வலுவாக இருக்கிறார் ராவ். வாரிசு அரசியல், கோடிகள் செலவழித்து நடத்தப்படும் யாகங்கள், ஜோதிடத்தின்மீது அதீத நம்பிக்கை என ஏகப்பட்ட பின்னடைவுகள் இருக்கின்றனதான். ஆனாலும், தெலங்கானாவின் 21 மாவட்டங்களிலும் சுனாமியாகச் சுழற்றியடிக்கிறது ‘கே.சி.ஆர் அலை’!

கலுவுகுண்டலா சந்திரசேகர் ராவ் என்கிற கே.சி.ஆர் ஆரம்பகாலங்களில் காங்கிரஸ்காரர்தான். ஆனால், தனித் தெலங்கானா கனவு அவரைத் தனிக்கட்சி காண வைத்தது. 2001-ம் ஆண்டு தனித் தெலங்கானா என்பதை மட்டுமே ஒற்றை இலக்காக அறிவித்து தெலங்கானா ராஷ்டிரிய சமிதியை உருவாக்கினார். கட்சி ஆரம்பித்த சில ஆண்டுகளுக்குள், தெலங்கானா பின்னணி கொண்ட காங்கிரஸ் மற்றும் தெலுங்கு தேசத் தலைவர்கள் பலர், சந்திரசேகர் ராவால் ஈர்க்கப்பட்டு டி.ஆர்.எஸ் கட்சியில் இணைந்தார்கள்.