எலெக்‌ஷன் எக்ஸ்பிரஸ்! | Parliament Election Express News - Junior Vikatan | ஜூனியர் விகடன்

வெளியிடப்பட்ட நேரம்: 06:00 (20/04/2019)

எலெக்‌ஷன் எக்ஸ்பிரஸ்!

கலைஞர் இல்லாத கோபாலபுரம்!

வெ
ற்றியோ, தோல்வியோ கடந்த அறுபது ஆண்டுகளாகத் தேர்தல் பரபரப்பை, உணர்வுபூர்வமாக உலகுக்குக் காட்டிக்கொண்டிருந்த கோபாலபுரம் கலைஞர் இல்லம் தேர்தல் நாளன்று வெறிச்சோடிக் கிடந்தது. கலைஞர் வாக்களிக்கச் செல்லும் காரில், தயாளு அம்மாள் மட்டும் மு.க.தமிழரசுவுடன் புறப்பட்டுச் சென்றார். கையெழுத்துப் போட இயலாததால், வாக்குச் சாவடியில் கைநாட்டு பதித்தார் தயாளு அம்மாள். கலைஞர் பயன்படுத்திய அதே தள்ளுவண்டியில் தயாளு அம்மாளைச் ஓட்டுச் சாவடிக்குள் அழைத்து வந்தார் தமிழரசு.