“நான் ஒரு தி.மு.க சொம்பு... நான் ஒரு பி.ஜே.பி சங்கி... நான் அ.தி.மு.க பிரசார பீரங்கி!” - கலகல கஸ்தூரி... | interview with actress Kasthuri - Junior Vikatan | ஜூனியர் விகடன்

வெளியிடப்பட்ட நேரம்: 06:00 (20/04/2019)

“நான் ஒரு தி.மு.க சொம்பு... நான் ஒரு பி.ஜே.பி சங்கி... நான் அ.தி.மு.க பிரசார பீரங்கி!” - கலகல கஸ்தூரி...

ரசியல், சமூகம் என எந்தப் பிரச்னையாக இருந்தாலும், மனதில் பட்டதை வெளிப்படையாக போட்டு உடைப்பவர் நடிகை கஸ்தூரி. சமீபத்தில் அப்படிதான் எம்.ஜி.ஆர் - லதா குறித்து சர்ச்சைக்குரிய கருத்து ஒன்றை ட்விட்டரில் வெளியிட்டு பரபரப்பைக் கிளப்பினார் கஸ்தூரி. அவரிடம் சில கேள்விகளை முன்வைத்தோம்.

“நீங்கள் நாம் தமிழர் கட்சியில் சேர்ந்துவிட்டதாக சமீபத்தில் ஒரு செய்தி பரவியதே?” 

“அப்படியா... (சிரிக்கிறார்) சில நாள்களுக்கு முன்னாடி மதுரையில ஒரு பேட்டி கொடுத் தேன். அதைப் பார்த்துட்டு, ஆளாளுக்கு என்னைக் கேள்வி கேட்டு, கிண்டல் செய்து பிரிச்சு மேய்ஞ்சிட்டாங்க. அந்தப் பேட்டியில நான் சொன்னதை வெச்சு, அதுக்கு நானே கமென்ட்ஸ் கொடுத்து ஒரு ட்விட் போட் டேன். உங்க கேள்விக்கு அதுதான் பதில். அந்த ட்விட்டை சொல்றேன் கேளுங்க… ‘மாநிலத்தில் பினாமி ஆட்சி தோற்கும்... அதனால், நான் ஒரு தி.மு.க சொம்பு; மத்தியில் மாற்றம் வராது... அதனால் நான் ஒரு பி.ஜே.பி சங்கி; நாம் தமிழர் கட்சி மட்டும் சரிபாதியாக பெண்களுக்கு சீட் கொடுத்துள்ளது… அதனால், நான் சீமானின் கொ.ப.செ; மதுரை அ.தி.மு.க வேட்பாளர் ராஜ்சத்யன் நல்லவர்... அதனால் நான் அ.தி.மு.க-வின் பிரசார பீரங்கி.’ சரியாதானே சொல்லியிருக்கேன்...”

நீங்க எப்படி பீல் பண்றீங்க