“நாங்கள் ஊறுகாய் அல்ல!” - குமுறும் என்.ஆர்.காங்கிரஸ் நிர்வாகிகள் - குழப்பத்தில் ரங்கசாமி.... | Inter-party issue in Puducherry NR congress - Junior Vikatan | ஜூனியர் விகடன்

வெளியிடப்பட்ட நேரம்: 06:00 (20/04/2019)

“நாங்கள் ஊறுகாய் அல்ல!” - குமுறும் என்.ஆர்.காங்கிரஸ் நிர்வாகிகள் - குழப்பத்தில் ரங்கசாமி....

புதுச்சேரி அரசியலில், என்.ஆர் காங்கிரஸ் கட்சியில் குழப்பங்களுக்கும் சுவாரஸ்யங்களுக்கும் பஞ்சம் இருக்காது. அந்த வகையில், ஏற்கெனவே கட்சியிலிருந்து விரட்டப்பட்டவர்களை மீண்டும் கட்சியில் இணைத்ததால், என்.ஆர் காங்கிரஸில் கோஷ்டிப் பூசல் உச்சத்தில் இருக்கிறது. இதை சமாளிக்க முடியாமல் திணறிவருகிறார் அந்தக் கட்சியின் தலைவர் ரங்கசாமி.

காங்கிரஸ் கட்சியிலிருந்து வெளியேறி தனிக்கட்சித் தொடங்கிய ரங்கசாமி, அ.தி.மு.க-வுடன் கூட்டணி வைத்து 2011 சட்டமன்றத் தேர்தலில் வெற்றிபெற்றார். காரியம் முடிந்ததும் கச்சிதமாக அ.தி.மு.க-வைக் கழற்றிவிட்டவர், சுயேச்சை ஒருவரின் ஆதரவுடன் ஆட்சியில் அமர, கொதித்துப்போய் கூட்டணி யிலிருந்து வெளியேறியது அ.தி.மு.க. தொடர்ந்து காங்கிரஸ் கட்சியைச் சேர்ந்த ராதாகிருஷ்ணனை இழுத்து 2014 நாடாளு மன்றத் தேர்தலில் நிற்க வைத்து வெற்றிபெற வைத்தார் ரங்கசாமி.

நீங்க எப்படி பீல் பண்றீங்க