சிக்கியது 1.5 கோடி... அ.ம.மு.க-வினர் பறித்துக்கொண்டு ஓடியது 4.5 கோடி? - ஆண்டிபட்டி அவலம்! | AMMK election atrocities in andipatti - Junior Vikatan | ஜூனியர் விகடன்

வெளியிடப்பட்ட நேரம்: 06:00 (20/04/2019)

சிக்கியது 1.5 கோடி... அ.ம.மு.க-வினர் பறித்துக்கொண்டு ஓடியது 4.5 கோடி? - ஆண்டிபட்டி அவலம்!

பெயரில் ஆண்டியை வைத்துக்கொண்டு கட்டுக்கட்டாக பணம் புரளும் பணக்காரத் தொகுதியாக இருக்கிறது ஆண்டிபட்டி. தேனி மாவட்டம், ஆண்டிபட்டி அ.ம.மு.க தேர்தல் அலுவலகத்தின் மேல்தளத்திலுள்ள டிராவல்ஸ் நிறுவனத்தில், ஏப்ரல் 16-ம் தேதி இரவு நடத்தப்பட்ட அதிரடி சோதனையில் கட்டுக்கட்டாகப் பணம் சிக்கியுள்ளது. சோதனையின்போது ஏராளமான பணத்தை அ.ம.மு.க-வினர் தூக்கிக்கொண்டு ஓடியதால், வானத்தை நோக்கி துப்பாக்கியால் சுட்டு போலீஸார் எச்சரித்தனர். மேற்கண்ட சோதனையில், கைப்பற்றப்பட்ட பணமான ஒன்றரை கோடிக்கு இதுவரை யாரும் உரிமை கோரவில்லை.