மனநோயாளிகளைக்கூட ‘தனியார்மயம்’ ஆக்கும் தமிழக அரசு! - எங்கே போனது மனிதநேயம்? | Tamil Nadu government plan to change mental patients into Privatization - Junior Vikatan | ஜூனியர் விகடன்

வெளியிடப்பட்ட நேரம்: 06:00 (20/04/2019)

மனநோயாளிகளைக்கூட ‘தனியார்மயம்’ ஆக்கும் தமிழக அரசு! - எங்கே போனது மனிதநேயம்?

முட்டாள்தனமான, அபத்தமான காரியங்களை திரும்பத்திரும்பச் செய்பவர்களை, ‘கீழ்ப்பாக்கம் கேஸ்’ என்று சர்வசாதாரணமாக ஏளனம் செய்வது தமிழ்நாட்டின் நீண்ட நெடிய ‘முட்டாள்தனமான’ சொல்வழக்கு. இந்தத் தேர்தல் பிரசாரத்தில்கூட, எதிரணியினரை மட்டம் தட்டிப் பேசுவதாக நினைத்துக்கொண்டு, ‘இன்னாரை கீழ்ப்பாக்கத்தில் சேர்க்கவேண்டும்’ என்று சகஜமாக வார்த்தைகளால் விளாசிக் கொண்டிருக்கின்றனர் மாண்புமிகு அரசியல் வாதிகள். இந்தநிலையில்தான் கீழ்ப்பாக்கம் மனநல மருத்துவமனையில், நீண்டகாலமாகத் தங்கியிருக்கும் உள்நோயாளிகளை தனியார் பராமரிப்பு மையத்தில் ஒப்படைக்க தமிழக அரசு கையெழுத்துப் போட்டிருப்பது அம்பலமாகியிருக்கிறது!

சுமார் 45 ஏக்கர் பரப்பளவில் அமைந்திருக்கும் இந்த மருத்துவமனையில், புறநோயாளிகள் பிரிவு, உள்நோயாளிகள் பிரிவு என இரண்டு தனித்தனி வளாகங்கள் உள்ளன. மொத்தம் 22 வார்டுகள். புறநோயாளிகள் பிரிவில் தங்கி சிகிச்சைபெறும் வசதியும் உள்ளது. உள்நோயாளிகளுக்கான வளாகம் உயரமான சுற்றுச்சுவருடன் பாதுகாக்கப் பட்ட பகுதியாக அறிவிக்கப்பட்டுள்ளது. மருத்துவமனையில் தினமும் சராசரியாக 500 முதல் 600 பேர்வரை வெளியிலிருந்து வந்து புறநோயாளிகள் பிரிவில் சிகிச்சைபெற்றுச் செல்கின்றனர். இதே பிரிவில், தற்போது ஆண்களுக்கான வார்டில் 64 பேரும் பெண்களுக் கான வார்டில் 24 பேரும் சிகிச்சைபெற்று வருகின்றனர். இவர்களைத் தவிர, மாதக்கணக்கில், ஆண்டுகள் கணக்கில் உள்நோயாளிகளாகச் சிகிச்சைபெற்றுவருவோரின் எண்ணிக்கை 855. இவர்களில் 506 பேர் ஆண்கள்; 349 பேர் பெண்கள். இது, ஏப்ரல் முதல் வார நிலவரம்.