பொதுத் தேர்தலும்... பொல்லாத போலிச் செய்திகளும்! | Fake news in Election period - Junior Vikatan | ஜூனியர் விகடன்

வெளியிடப்பட்ட நேரம்: 06:00 (24/04/2019)

பொதுத் தேர்தலும்... பொல்லாத போலிச் செய்திகளும்!

அமைதி காக்கவும் அன்பர்களே...

‘தேர்தல் என்றாலே பொய் வாக்குறுதிகள் நிரம்பி யிருக்கும்’ என்பதுதான் கடந்த கால வரலாறு. ஆனால், இது தகவல் தொழில்நுட்ப யுகம். ஃபேஸ்புக், ட்விட்டர், வாட்ஸ்அப் என்று நீளும் சமூக ஊடகங்கள் வழியாகவே தகவல்கள் தடதடக்கின்றன. அவற்றில் எது உண்மை, எது பொய் என்பதை எல்லாம் சிந்திக்க இங்கே யாருக்கும் நேரமில்லை. எனவே, இப்போது எல்லாம் தேர்தல் நேரத்தில் வெளியாகும் போலிச் செய்திகளின் தாக்கம், வாக்காளர்களை தாறுமாறாகக் குழப்பியடிக்கின்றன.

ஒரு போலிச் செய்திக்கு தேர்தல் முடிவுகளை மாற்றும் அளவுக்குச் சக்தி இருக்கிறதா என்று கேள்வி எழலாம். 2014 மக்களவைத் தேர்தலின்போது குஜராத் மாநிலத்தின் வளர்ச்சி என்று பிரமாண்ட கட்டடங்கள், பாலங்கள், மின்னும் நகரம் என்று பல்வேறு புகைப்படங்கள் வெளியாகின. விளைவு, 2014 நாடாளுமன்றத் தேர்தலில் பி.ஜே.பி வெற்றி பெற்று, மோடி பிரதமரானார். குஜராத் மாடல் என்று இணையத்தில் வெளியானது அனைத்தும் வெளிநாடுகளில் எடுக்கப்பட்ட புகைப்படங்கள். இவை தேர்தலுக்குப் பிறகே தெரிந்தது. பி.ஜே.பி சார்பில் அவர்களுடைய ‘ஸ்லீப்பர் செல்’கள் இதை பரப்பினார்கள். உண்மையில், சமூக வளர்ச்சிக்கான பட்டியலில் குஜராத் மாநிலம் 15-வது இடத்தில் இருக்கிறது. தமிழகம் மூன்றாவது இடத்தில் இருக்கிறது.