தபால் வாக்குகளை மாற்ற சதியா? - மதுரையில் அத்துமீறிய அதிகாரிகள் | Tahsildar illegally entry Madurai EVM strong room - Junior Vikatan | ஜூனியர் விகடன்

வெளியிடப்பட்ட நேரம்: 06:00 (24/04/2019)

தபால் வாக்குகளை மாற்ற சதியா? - மதுரையில் அத்துமீறிய அதிகாரிகள்

துரை மருத்துவக் கல்லூரியில் வாக்குப் பெட்டிகள் வைக்கப்பட்டிருக்கும் அறைக்கு அருகிலிருக்கும் அறையில், தபால் வாக்குகள் உள்ளிட்ட ஆவணங்கள் வைக்கப்பட்டுள்ளன. இந்த அறைக்குள் தாசில்தார் உட்பட மூன்று பேர் நுழைந்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

ஏப்ரல் 20-ம் தேதி மாலை சுமார் 4 மணியளவில் உதவி தேர்தல் அதிகாரி தாசில்தார் சம்பூர்ணம், ஆவணப்பதிவு அலுவலர் சீனிவாசன், மாநகராட்சி அலுவலர் ராஜபிரகாஷ், சூரியபிரகாஷ் ஆகியோர் ஆவணங்கள் வைக்கப்பட்டுள்ள அறைக்குள் சென்றுள்ளனர். இதையறிந்து சி.பி.எம் வேட்பாளர் சு.வெங்கடேசன், அ.ம.மு.க வேட்பாளர் டேவிட் அண்ணாதுரை உள்ளிட்ட எதிர்க் கட்சியினர் அங்கு திரண்டதால், பதற்றம் ஏற்பட்டது. அவர்கள் போராட்டத்தில் ஈடுபட்டதுடன், தேர்தல் ஆணையத்திடமும் புகார் தெரிவித்தனர். இதையடுத்து, அந்த நான்கு பேரும் பணியிடை நீக்கம் செய்யப்பட்டனர்.

நீங்க எப்படி பீல் பண்றீங்க