‘‘அணு உலையில் பிரச்னை இருக்கிறது’’ | Atomic Energy Commission Chairman Controversial speech - Junior Vikatan | ஜூனியர் விகடன்

வெளியிடப்பட்ட நேரம்: 06:00 (24/04/2019)

‘‘அணு உலையில் பிரச்னை இருக்கிறது’’

- சர்ச்சையைக் கிளப்பும் அணுசக்திக் கழகத் தலைவர்!

கூடங்குளம் அணு உலையின் முதல் இரு அலகுகளின் கட்டுமானம், செயல்பாடு ஆகியவற்றில் கோடிக்கணக்கான ரூபாய் அளவில் முறைகேடு நடந்திருப்பதாக, மத்திய கணக்குத் தணிக்கைக் குழுவினர் கடந்த ஆண்டு நாடாளுமன்றத்தில் அறிக்கை தாக்கல் செய்தனர். அந்தச் சர்ச்சையே இன்னும் தீராத நிலையில், ‘கூடங்குளம் அணு உலையில் பிரச்னை இருக்கிறது’ என்று இந்திய அணுசக்திக் கழகத்தின் தலைவர் மற்றும் அணுசக்தித் துறைச் செயலாளர் கமலேஷ் நில்கந்த் வியாஸ் கூறியிருப்பது, பரபரப்பைக் கிளப்பியுள்ளது.